Category: இயந்திரா
-
ஐயய்யோ ஒரு சாதனை!
டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்- உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும்…
-
இயந்திரா 4 – டுவிட்டர் குழப்பங்கள்
டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர். நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உலகுக்கு உரைப்பதே டுவிட்டர். ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனம். பல் தேய்க்கலாம், மூக்கை சிந்தலாம், ஐஸ் க்யூப்பை மெல்லலாம், படிக்கலாம், பந்தாடலாம்,…
-
இயந்திரா 3 – ப்ளர்ப்
blurb (blûrb) n. A brief publicity notice, as on a book jacket. blurb whore n. A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk. போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், “நல்லாருக்கு”, என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு…
-
இயந்திரா 2 – வீ – வீ – வீ
ஜிங்கிள் ஆல் த வே(Jingle all the way) என்ற படத்தில் ஆர்னால்டு ஷ்வாஸ்னிகர், தன் மகனின் கிறிஸ்துமஸ் பரிசாக கொடுப்பதற்கு டர்போ மேன் என்றொரு பொம்மையை தேடி ஊரெல்லாம் அலைவார். அதைப் போலவே உண்மையாக வருடத்திற்கு ஒரு பொம்மையையோ அல்லது வேறெதாவது பரிசுப் பொருளையோ தேடி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பலர் இந்த மாதிரி கடை கடையாக ஏறி இறங்குகிறார்கள். தான் தேடிய பரிசுப் பொருள் கிடைத்துவிட்டால் சந்தோஷப்படுகிறார்கள். இல்லாவிட்டால் பணம் இருப்பவர்கள் என்ன செலவழித்தாவது வாங்கிவிடுகிறார்கள்.…