Category: சுஜாதா
-
இன்னபிற
சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி. ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம்…
-
சுஜாதாவின் வீடு
இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள். குமுதத்தில் ரஞ்சன் எழுதிய சுஜாதாவின் வீடு என்னும் கட்டுரைக்கு, வலைப்பதிவுகளில் எதிர்ப்பு என்று எதோ கிளம்பி இருப்பதை பார்த்து மெளனமாய் சிரிப்புத் தான் வருகிறது. வலைப்பதிவுகளை பற்றி ஏளனமாய் குமுதம் எழுதிவிட்டது என்பதற்கான முதல்…