Category: சுஜாதா
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…
-
ஹாப்பி பர்த்டே வாத்யாரே!
வாத்தியார் இன்று இருந்திருந்தால் அவருடைய இளமையான 86ம் வயதில் ஐபிஎல்லையும், வைரஸையும், மாற்றமில்லாமல் கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுப் போடும் தமிழனையும் பற்றி கற்றதும் பெற்றதும் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார். தமிழில் எழுதப்பட்ட பிரமாதமான coming-of-age நாவலான நிலா நிழல் படித்தவுடன் பிடித்த சுஜாதா பித்து இன்னமும் விட்டபாடில்லை. ஹாப்பி பர்த்டே வாத்யாரே!
-
ஸ்டிரச்சர் கேஸ்
தமிழ் சினிமா இன்னமும் ஸ்டிரச்சர் கேஸ் தான். வருடத்திற்கு குறைந்தது இருநூறு திரைப்படங்களாவது திரைக்கு வருகின்றன (முந்நூறு பூஜைகள்). அதில் பத்துப் படம் போட்ட பணத்தை எடுத்தால் பெரிய விஷயம். ஒரு படமோ அல்லது அரை படமோ தான் மனதில் நிற்கும் படங்கள். மற்றவை எல்லாம், என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை தான். கடந்த பத்தாண்டில் வெளியான, நாயகனைப் போல், முள்ளும் மலரும் போல் ஒரு கால் நூற்றாண்டு கழித்தும் மனதில் நிற்கும் படங்கள் எவை…
-
மீண்டும் – இன்ன பிற
2010ல் தமிழ் பேப்பரில் பாரா எழுத சொல்லி இன்னபிற என்றொரு வாரப் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு உட்கார்ந்து நள்ளிரவு வரை எழுதி முடித்து சொக்கனுக்கு அனுப்பி விட்டு தூங்கப் போவேன். அது வெளிவந்து கொண்டிருந்தபோது யாராவது ஒரு ஆசாமி – சூப்பர் ப்ரோ என்று டுவிட்டரில் சொல்வார். அதோடு சரி. ரொம்ப வரவேற்பெல்லாம் இருந்ததாக ஞாபகம் இல்லை. கிட்டத்தட்ட 25 வாரங்களுக்கு பிறகு வேலைப் பளு காரணமாக அப்பத்திக்கு ஒரு…
-
கண்ணீரில்லாமல்
ஏழு வருடங்களுக்குப் பிறகும் வாரம் ஒருமுறையாவது ஞாபகத்துக்கு வந்து விடுவார். சில சமயம் பல நாட்கள். ஆகாய விமானங்கள் தடயமின்றி காணாமல் போனாலோ, இந்தியாவை சுத்தம் செய்கிறேன் என்று யாராவது சவடால் விட்டாலோ, ‘சே, வாத்தியார் என்ன சொல்லியிருப்பார்’ என்றே இன்னமும் தோன்றுவது அதிசயமல்ல. அவரெழுதிய எந்த ஒரு புத்தகத்தை இப்போது படிக்கும் போதும், ‘இவருக்கு என்ன தான் புரியாமல் போயிருக்கும்’ என்று தோன்றுவதும் அதிசயமல்ல. முன்னமே சொன்னது போல், எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை…