Category: சுஜாதா
-
சுஜாதாவின் வீடு
இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள். குமுதத்தில் ரஞ்சன் எழுதிய சுஜாதாவின் வீடு என்னும் கட்டுரைக்கு, வலைப்பதிவுகளில் எதிர்ப்பு என்று எதோ கிளம்பி இருப்பதை பார்த்து மெளனமாய் சிரிப்புத் தான் வருகிறது. வலைப்பதிவுகளை பற்றி ஏளனமாய் குமுதம் எழுதிவிட்டது என்பதற்கான முதல்…
-
மாதா, பிதா, சுஜாதா
கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எழுதினால், சுஜாதா என்கிற ரியலிஸ்ட், தமிழனின் உணர்ச்சிவசப்படும் குணம் என்பார். என்ன…எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒன்றும் புரியாத நிலையில், இப்போதைக்கு எதுவுமே எழுதாமல் இருப்பது சரி என்றே தோன்றுகிறது. கமல் அவரது அஞ்சலியில் சொன்னது போல், பிச்சைக்காரர்கள் தர்மம் கொடுக்கும் இடத்துக்குத் தான் மீண்டும் மீண்டும் செல்வார்கள். அதைப் போல் அவர் எழுத எழுத புரிந்து கொண்டதை, விட்டு விட முடியும் என்று தோன்றவில்லை. அதனால், விண் நாயகன் என்றொரு…
-
சுஜாதா – ஹெட்போன் ஹெட்லைன்
தேசிகனின் வலைப்பதிவில் எழுத்தாளர் சுஜாதாவின் உடல்நிலை பற்றி வந்திருந்த செய்தி, மனதை வருத்தியது. சுஜாதா உடல்நிலை தேறிவருகிறார் என்பது தற்போது நல்ல செய்தி. அந்த பதிவில், புன்னகைக்க வைத்த பத்தி – “சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்” “ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம்…