சுஜாதா – ஹெட்போன் ஹெட்லைன்

தேசிகனின் வலைப்பதிவில் எழுத்தாளர் சுஜாதாவின் உடல்நிலை பற்றி வந்திருந்த செய்தி, மனதை வருத்தியது. சுஜாதா உடல்நிலை தேறிவருகிறார் என்பது தற்போது நல்ல செய்தி.

அந்த பதிவில், புன்னகைக்க வைத்த பத்தி –

“சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்”

“ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம் வைக்கிறாங்க. ஆனா இந்த ஹெட் ஃபோன் தான் உறுத்துது. அந்த கேபிள் லென்த் பொறலை. காட்லெஸ் ஹெட் போன் எங்க கிடைக்கும் ?”

“இங்க சென்னைலயே கிடைக்கும், கிடைச்சா வாங்கி அனுப்பறேன்”

“காலையில பேப்பர் படிக்கிறேன், ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு வந்த போது என்ன ஹெட்லைன்ஸ் இருந்ததோ அதே தான் இப்ப இருக்கு, ஒண்ணும் மாறலை” என்றார். நான் புன்னகை செய்தேன்.

இன்னுமொரு நூற்றாண்டிரும் !!

Create a website or blog at WordPress.com