Writer Sujatha recovering from pneumonia

Writer Sujatha was recently admitted in a hospital due to pneumonia. Desikan writes a touching note on his blog.

While its shocking to know that Sujatha had a pneumonia attack that bothered his kidney, on a bright side, he is recovering quickly from it. Let’s hope that Writer Sujatha recovers completely and comes back to entertain us with his columns.

Here’s the piece from Desikan’s blogpost

குடியரசு தினத்திற்கு சில நாள்கள் முன் ஒரு காலையில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் திருமதி. சுஜாதா

“தேசிகன், சாருக்கு உடம்பு சரியில்லை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஐ.சியூவில் இருக்கார்.”

“மாமி என்ன ஆச்சு?”

“புத்தகக் கண்காட்சி, சிவாஜி திரைப்பட விழாவுக்கெல்லாம் போனதா என்னன்னு தெரியலை, நிமோனியா வந்து, அதுக்கு சாப்பிட்ட மாத்திரைனால கிட்னி affect ஆகி, இப்ப மூச்சுச் திணறல் வந்து ஆக்ஸிஜன் வெச்சிருக்காங்க”

“யார் பாத்துக்கரா?”

“யாருக்கும் தெரியாதுப்பா. ஏதோ உன்கிட்ட சொல்லணும்னு தோணித்து, சொன்னேன், அவர் தம்பிக்குக் கூட தெரியாது”

அந்த வாரம் சென்னை சென்று அவரை அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யுவில் பார்த்தேன். உடம்பு மெலிந்து, குழந்தை போல இருந்தார். குழந்தை மாதிரியே பேசினார்.

“என்ன தேசிகன் எப்படி இருக்க. இப்ப என்ன கிறுஸ்துமஸ் லீவா ?”

“சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்”

“ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம் வைக்கிறாங்க. ஆனா இந்த ஹெட் ஃபோன் தான் உறுத்துது. அந்த கேபிள் லென்த் பொறலை. காட்லெஸ் ஹெட் போன் எங்க கிடைக்கும் ?”

“இங்க சென்னைலயே கிடைக்கும், கிடைச்சா வாங்கி அனுப்பறேன்”

“காலையில பேப்பர் படிக்கிறேன், ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு வந்த போது என்ன ஹெட்லைன்ஸ் இருந்ததோ அதே தான் இப்ப இருக்கு, ஒண்ணும் மாறலை” என்றார். நான் புன்னகை செய்தேன்.

“சீக்கரம் வெளியே வாங்க இன்னொரு டிரிப் ஸ்ரீரங்கம் போகலாம்” என்றேன். முகம் மலர்ந்தது. “கட்டாயம் போகலாம்,” என்றார் தன்னம்பிக்கையுடன்.


5 responses to “Writer Sujatha recovering from pneumonia”

  1. I hope writer Sujatha bounces back fast and continue to entertain and educate us. I am one of several Tamizh guys and gals who are head over heels in love with his works, both fiction and nonfiction.

    Like

  2. sorry about this bad news

    Writer sujatha passed away tonight at 2122(IST)(27th February) at Apollo Hospital.
    He was hospitalised for some time now.
    Let us pray god that his soul rests in peace and his works obviously will live for ever.

    Dindi

    Like

  3. May his soul rest in peace. His works were really inspirational and will live forever in our hearts and influence our minds…

    Thiru

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s