Category: இன்னபிற
-
ஒரு படமும் சில பழைய ரிக்கார்டுகளும்
‘இந்த வருடத்தின் சிறந்த’ லிஸ்ட்டில் அடுத்தது, சிறந்த தமிழ்ப் படம். என்ன தான் டப் செய்தாலும் தமிழ் நாடு தாண்டி இந்தக் கதை புரியாது என்று தெரிந்தும் மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன். கடைசியில் காட்பாடி தாண்டி ஆந்திராவில் பிய்த்துக் கொண்டு ஓட, தமிழ் கூறும் நல்லுலகம் கதை புரியவில்லை என்ற பழைய ரிக்கார்ட்டை தேய்த்துக் கொண்டிருந்தது. இந்த மாதிரி 263 நாட்கள் படம் எடுத்தார்கள், 32 கோடி செலவு செய்தார்கள் என்ற…
-
புரட்சியாளன் கதை
போன வாரம் நடந்த நிகழ்ச்சிகள் சில – 1. இன்ன இன்ன மத்திய மந்திரி இன்ன இன்ன ஊழலில் லஞ்சம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். 2. இன்ன இன்ன எதிர்க்கட்சி போர்க்கொடி தூக்க, இன்ன இன்ன பிரதமர் பேசாமடந்தையாய் இருந்தார். 3. இரண்டொரு நாளில் தொல்லை தாங்க முடியாமல் இ.இ மந்திரி ராஜினாமா செய்தார். 4. இன்ன இன்ன எதிர்க்கட்சி இந்த நியாயம் கிடைத்ததற்கு தான் தான் காரணம் என்றது. 5. இந்தக் கணத்தில் இதில் சம்பந்தபட்ட இன்ன…
-
இயேசுநாதரும் பி.சி. ஸ்ரீராமும்
இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது. பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது. வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார். ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள். சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து…