Category: சென்னை
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 3
3 1950களில் கல்கி பத்திரிக்கை வெளியாகும் வியாழனன்று ரயில் நிலையங்களில் காத்திருந்து, ரயில் நின்றவுடன் அடித்துப் பிடித்து முதல் பிரதியை பிடுங்கி, அங்கேயே பெரிய தூண்களுக்கு அருகில் உட்கார்ந்து பொன்னியின் செல்வனின் அந்த வாரக் கதையை படித்து விட்டு, கை இடுக்கில் சொருகிக் கொண்டு வீட்டிற்கு சென்றவர்கள் ஏராளம். இது உலகமெங்கும் நடந்த விஷயம் தான், சார்லஸ் டிக்கின்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் அத்தியாயங்களாய் எழுதிய போதும், சர் ஆர்தர் கோனன் டாய்லின் ’எ ஸ்கேன்டல் இன் போஹேமியா’…
-
தாத்தாவின் அலமாரி
இன்று இருந்திருந்தால் என் தாத்தா ஓங்கூர் துரைசாமியின் 95வது பிறந்தநாள். அவர் பிறந்தநாளன்று போன் செய்தால், ஆல் த பெஸ்ட் என்று மனதார வாழ்த்தி முடிப்பார். அந்த ஆல் த பெஸ்ட் என்னோடு நிறையவே ஒட்டிக்கொண்டு விட்டது. பிறகொரு நாள் நான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த போது கைகுலுக்கி, ஏதோ ஞாபகத்தில் ஆல் த பெஸ்ட் என்று சொல்லிவிட்டேன். ரஹ்மான் தன் தலையை உயர்த்தி ஒரு நொடி என்னை உற்று நோக்கிய போது தான் புரிந்தது நான் செய்த அபத்தம். அந்த அபத்தத்தைப் பற்றி தனியாக எழுதலாம். பிறந்ததிலிருந்து இருபத்தேழு வயது வரை நான் பாட்டி தாத்தாவின் அருகிலேயே இருந்ததால்…