Category: அமெரிக்கா
-
வழக்கம் போல்
ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் நிறைய எழுத வேண்டும் என்பது போல் இந்த முறை நினைக்கவில்லை. அதைவிட அதிகமாக. நாள்தோறும் ஐந்து நிமிடத்திற்கு எதாவது தவறாமல் எழுதுவது என்று சென்னையில் இருந்து திரும்பும் போது நினைத்துக் கொண்டேன். சியாட்டல் வந்தவுடன் வழக்கம் போல் வேலை வீடு சினிமா புத்தகம் என்று நேரம் ஓடிவிட அவ்வப்போது கிறுக்கிய சில சிறுசிறு கதைகளைத் தவிர வேறொன்றையும் கிழித்துவிடவில்லை. மார்கழிச் சென்னை சுகமாயிருந்தது. நண்பர்கள், குடும்பம், கொஞ்சம் கச்சேரி இசை, நிறைய…
-
சென்னையில் ஒரு இசைக் காலம்
சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது. ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை…
-
படிப்பது – ஸ்லேட்
நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட்…