Year: 2007
-
சிவாஜி – பாடல்கள்
Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில்…
-
இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி
எழுதியது ஆனந்த் கிரிதர்தாஸ் என்ற இந்தியனாதலால் ஒரு மெலிதான biasயுடன் எழுதப்பட்டதோ என்று தோன்றினாலும், எழுதியிருப்பதில் பாதி உண்மை இருந்தால் கூட இது வளர்ச்சி தான். நியுயார்க் டைம்ஸில் வந்த இந்தியாவின் அவுட்சோர்சிங் வளர்ச்சி பற்றிய கட்டுரை, விரியும் தொழில்நுட்ப எல்லைகளை பற்றிய ஒரு அபார ரிப்போர்ட். படித்தால் மகிழ்வீர்கள்.
-
ஸ்ரீ ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸாய நம !!
கிதார் பிரசன்னாவின் ஸ்ரீ ஜிம்மி பாடலின் live version. இந்த வர்ஷனில் கடம் குறைகிறது. கடைசி இரண்டு நிமிடங்களில் லேசாக ஜிம்மி தென்படுகிறார். அசல் பாடலின் சாம்பிள் இங்கே. ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸுக்கு ஒரு அசத்தல் ட்ரிப்ப்யூட்.
-
இயந்திர பித்து
2005 தாங்ஸ்கிவ்விங்[thanksgiving] அன்று, காம்ப் யு.எஸ்.ஏ சென்று நடுநிசியில் நின்றது போன்ற அனுபவம் சென்னையிலும் கிடைக்காது. போனது எதுவும் வாங்குவதற்கல்ல. அந்த ஷாப்பிங் அனுபவத்திற்காக. கண்டிப்பாய் கிடைப்பதரிது. வருங்காலத்தில் யாராவது கேட்டால், “டேய் நான் கூட பனியில வெடவெடன்னு வாய் டைப்படிக்க, அந்த பெரிய லைன்ல நின்னுகிறேன்” என்று மார் தட்டலாம். எந்த கடைக்குப் போனாலும், தாங்ஸ்’கிவ்விங்’ என்று கையில் உள்ள காசத்தனையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறார்கள். அந்த வகையில் அது ஒரு பந்தா அனுபவம்.…
-
இது போர்க்களமா?
ப்ளாக் ப்ளாக் என்று காமெடியாய் ஏதோ ஆரம்பித்து இன்று கொலை மிரட்டலில் வந்து நிற்கிறது. கேதி சியரா(Kathy Sierra) என்னும் ஒரு பிரபல ப்ளாகர் ஒருவரரின் வலைப்பதிவிற்கு வந்த ஏராளமான, பெயரில்லாத மிரட்டல் கமெண்டுகளால், அவர் பேசவேண்டிய ஒரு கான்பெரன்ஸிலிருந்து விலகிக் கொண்டார். கேதி ப்ளாக் தவிர சில ஜாவா சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியவர். இவர் வலைப்பதிவு எழுதுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்க போய், பூதம் கிளம்புகிறது. இவரின் Creating Passionate Users என்னும் பிரபல வலைப்பதிவில் இது…