Year: 2007
-
பின் கதைச் சுருக்கம்
தீவிரவாதம், முதலாளித்துவம், எல்லை, யுத்தம் என்றெல்லாம் பரபரப்பு கட்டுரைத் தொடர் எழுதும் பா. ராகவனின், எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அமைதிப் புத்தகம், பின் கதைச் சுருக்கம். கல்கியில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றதாக பின் கதைச் சுருக்கத்தின் முன்னுரை கூறுகிறது. 17 நாவலாசிரியர்கள். 17 நாவல்கள். ஒரு இணைக்கும் பாலம். அனுபவங்கள். இதிலுள்ள 17 நாவலாசிரியர்களையும் அவர்களின் ஒரு நாவல் பற்றிய சிறு குறிப்பும், அந்த நாவலுக்கு பின்னுள்ள சில ஆழ்ந்த அனுபவங்களுமே இதன் களம். இதிலுள்ள…
-
எம்பாட்டு ஜிம்பாட்டு !!
ஜிம், எக்ஸர்சைஸ் எல்லாம் வீணர்கள் செயல் என்று நினைத்த காலமெல்லாம் போய், நாளொரு டிரட்மில்லும் பொழுதொரு ஸ்டிரச்சுமாகி விட்டது. முதன்முதலில் டிரட்மில் செய்ய ஆரம்பித்த போது, ஒன்றும் புரியாத பால காண்டத்தில், டீல் காத்தாடி பிடிக்க தப தப என்று தலைதெறிக்க வெள்ளாளத் தெருவில் ஓடியது போல, டிரட்மில்லில் ஏறிய நொடியில் இருந்து ஓட ஆரம்பித்தேன். இரண்டு நிமிடத்தில் ஆக்ஸிஜன் போதாமல் மூச்சடைக்க, கால் அகட்டி நின்றுவிட்டேன். இப்படியாக பத்து நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்…
-
பார்வை 360 – சுஜாதா
குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார். 1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.…
-
முத்தம் தின்பவள்
நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டுப் பூ இவள் தினம் ஆடை சந்தையிலே முதலில் தோற்பவள் இரு குறையட்டும் திரு விளக்கு நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு அட!! கடவுளை அடையும் வழிகள் என் மேல் எழுதிருக்கு மய்யா மய்யா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மய்யா மய்யா என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும் பொய்யா பொய்யா… அயிட்டம் நம்பரிலும் ஒரு subtle இலக்கிய சாதனை. அட போட வைத்தவர்கள் வைரமுத்து, ரஹ்மான் மற்றும் சின்மயி.