Year: 2007
-
மெக்ஸிகோ சலவைக்காரி ?
குமுதம் 360 பார்வை தொடரில், இந்த வாரம் சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரியின் ஜோக்கை, குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பியிடம் சொன்னதை பற்றி சொல்கிறார். இப்போதும் எந்த ஒரு பெரிய பத்திரிக்கைகளிலும் அதை விலாவரியாக எழுத முடியாது என்கிறார். யாராவது புதிய தமிழ் வானம் அல்லது புதிய தமிழ் பூமி என்ற பத்திரிக்கைகளில் சுஜாதாவை எழுத அழைக்கலாம். ஜோக் வெளிவந்தால் சரி. கமலின் அப்பு குள்ளமான ட்ரிக்குக்கு அடுத்தபடியான ஒரு தமிழ் நாட்டு கேள்வி, மெக்ஸிகோ சலவைக்காரி தான். கமல்…
-
நாயக நினைவுகள்
2005ல் கமலஹாசன் மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிக்கு அளித்த சுவாரசிய பேட்டி, ஆறு பாகங்களாக. இந்த கிளிப்பிங்கில் மணிரத்னம், நாயகன், நாசர் மற்றும் பாரதி பற்றி பேசுகிறார். கமல் ஒரு intermediate சுயசரிதை எழுதலாம். பிய்த்துக் கொண்டு விற்கும்.
-
பச்சைத் தமிழனின் கலைந்த தலை
எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு. வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு…
-
முன் கதை சுருக்கம்
“ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது. “இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.” “யார்ப்பா அது ?” “என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.” “இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள். “பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட…
-
காபி வித் அனு
அனுஹாசன் வாயாடும் celebrity chat ஷோ. இதை காபி வித் கரண் என்று கரண் ஜோஹர், ஸ்டார் டீவியில் செய்த போது படா பேஜாராக இருந்தது. விஜய் டீவியில் முதலில் காவி வித் சுச்சி என்ற விளம்பரம் பார்த்த போது, யூகிசேதுவின் நையாண்டி தர்பார் போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நன்றாகவும் இருந்தது. சுசித்ரா, கொஞ்சம் செயற்கையாக, தமிழை கொஞ்சி கொஞ்சி சரோஜா தேவி போல பேசினாலும், மிர்ச்சி ரேடியோ கேட்டதால் பழக்கமாகி பிடித்துப்…