Year: 2007
-
குளோபல் வார்னிங்
மேலே உள்ள தலைப்பை அனேகர் குளோபல் வார்மிங் என்று தான் படித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களையும் மீடியா ஆக்கிரமித்துவிட்டது. குளோபல் வார்மிங் பற்றி ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்க என்றால் பலர் எஸ்கேப். “என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகோன்(உலகம்) சூடாவுது சார் அவ்ளோதான்” என்பார்கள் மிச்ச சிலர். தவறு மீடியாவுடையது. எந்த காபி ஷாப்ல மீட் பண்ணலாம் என்று வருகிற டுவிட்டர் தொந்தரவுகளை சற்று நேரம் அணைத்துவிட்டு படித்தால் குளோபல் வார்மிங் வார்னிங் புரியும். ஒரு சனிக்கிழமை,…
-
சமையல் குறிப்பு !!
“தினமும் பீட்ஸா பாஸ்தான்னு சாப்டாம ஒழுங்கா பாக்கெட் சாப்பாடு சாப்டுங்க”, என்று மோவாக்கட்டையை அழுத்திப் பிடித்து சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினாள் மனைவி. பாக்கெட் சாப்பாடா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு மங்கையர் மலர் குறிப்பெழுதலாம். ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன், அண்டாகள் நிறைய சாம்பாரும் ரசமும் அவியலும் மற்ற சில சுவை உணவுகளுமாய் தாயராகிக் கொண்டிருக்க, யாரோ கெஸ்ட் வருகிறார்கள் என்று நானும் நினைத்தேன். “தோ பாருங்க…இங்க இதை பிடிங்க” என்று கூப்பிட்ட போது…
-
ட்ருமேன் கப்போட்டி
1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல். இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at…
-
சுளுக்கு !!
போன செவ்வாய்கிழமை, அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி பாடிக்கொண்டே 2ண்ட் அவெண்யூவில் ஓட்டமும் நடையுமாக பஸ் பிடிக்க வரும் போது, மளுக் என்றது. ஒரு நொடிக்கு கண்களில் ஆயிரமாயிரம் ரத்ன ஊசிக்கள் தெரிந்தன. நின்றேன். அடுத்த அடி வைக்க முடியவில்லை. 212 பஸ் வேறு செனெகா ஸ்டிரீட்டை தாண்டி சென்று விட்டது. ஷூவில் ஒரு பக்கம் சற்று அதிகமாகவே தேய்ந்து இருந்ததால், கணுக்கால் சட்டென்று உட்புறமாக மடங்கி மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் அது…