Category: சியாட்டல்
-
இன்னபிற
சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி. ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம்…
-
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஏ ஆர் ரஹ்மானும் !!
காலை 8:14. இன்று. கிட்டத்தட்ட வழிகிற சியாட்டல் பஸ்சில் மூச்சு வாங்க ஓடி வந்து, எப்படியோ ஏறியாகி விட்டது. முதல் நான்கு சீட்டுகளைத் தள்ளிப் போனால், எதிர் எதிரே பார்த்துக் கொண்டு உட்காருகிற ஸ்பெஷல் சீட்டுகள். உண்மையாக இந்த சீட்டுகள் ரொம்பவும் உயரத்தில், முதுகை ரொம்பவும் சாய்த்துக் கொள்ள முடியாத சீட்டுகள். வலது புற நான்கு பேர் உட்காரக் கூடிய சீட்டில் ஹாயாக மூன்று பேர் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இதோ அவர்களை கொஞ்சம் தள்ளி உட்கார…