Category: சியாட்டல்
-
பாண்டமிக் பப்பி
”நேற்று ஜீனோ ஜீனோ தான் என்றெல்லாம் சொன்னாயே, நீ ஏன் இன்னமும் ஒரு நாய்க்குட்டி எல்லாம் வாங்கல?” என்று நண்பர் ஒரு வாட்ஸ்அப்பில் கேட்டிருந்தார். போன இரண்டு வருடங்களில் வீட்டிலிருந்த போது செய்வதறியாது, பல நண்பர்கள் பாண்டமிக் பப்பிக்களை வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு முன்பின் நாய்களை வளர்க்காத இரண்டு நண்பர்கள் வாங்கியிருப்பதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த தொற்று காலத்தில் சட்டென விலையேறிப் போன வஸ்துக்கள் மூன்று – டாய்லெட் பேப்பர், வீடு மற்றும் நாய்க்குட்டிகள். ஒரு ஆறு…
-
தூக்கியடித்த தமிழ்
படம் – கேசவ் இடம்: சியாட்டில். மணி: காலை ஆறேமுக்கால். கோவிலில் பட்டர் திருப்பாவை படித்த எல்லாரையும் முன்னே வந்து ஒரு அகல் விளக்கேற்ற சொல்கிறார். ஏற்றிய விளக்குகளை ஒரு தட்டில் வைத்து கருவறையில் எடுத்துப் போய் திரையிட்டுக் கொள்ள, ‘அசைந்தாடும் மயில்‘ பாடப்படுகிறது. பாடல் முடிந்தவுடன் ட்யூப்லைட்டுக்கள் அணைக்கப்பட, பிரகாரம் சற்றே இருட்டாகின்றது. கருவறையில் இருந்து மணி அடிக்கிறது. ஓம் நாரயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி என்று பட்டர் சமஸ்கிருதத்தில் காயத்ரி சொல்கிறார். சட்டென்று திரை…
-
வெற்றிமாறனும் விஷால் பரத்வாஜும்
தற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள். இங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ…
-
இன்ன பிற – நாராயண் இருந்த வீடு
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி. சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம். சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும். போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார். இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது…