Category: இந்தியா
-
சங்கீதாவா சரவணபவனா?
தமிழில் ஒரு சொல்லின் மூலத்தை அறிய முற்படுவது பல இடங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்லும். போத்தீஸ் வாசலிலோ, டாக்டர் க்ளினிக்கிலோ நேரம் கடத்தும் போது நல்ல பொழுது போக்கு. இல்லையென்றால் வழக்கப்படி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் பார்க்கலாம். இப்படி etymologyயை பற்றி யோசிக்கும் போது தமிழில் இதற்கென இணைய மென்பொருள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ம்ஹூம் அகப்படவில்லை. ஒரு சொல்லை உள்ளிட்டு அதை வேர்ச்சொல்லாக ஆராயும்போது அந்த சொல்லுக்குப் பல விதங்களிலும் இணைக்கப்பட்ட சொற்கள் அந்த…
-
இரண்டு வேலைக்காரர்கள்
போன வாரம் நெட்ஃபிளிக்ஸில் இரண்டு திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. ஒன்று White Tiger, மற்றொன்று Sir. இரண்டு திரைப்படங்களின் கதைகளிலும் நாயகர்கள் இந்தியாவில் எங்கும் பார்க்ககூடிய சாராசரியான வேலைக்காரர்கள். அரவிந்த் அடிகா எழுதி 2008ல் புக்கர் பரிசு பெற்ற வொயிட் டைகர் நாவலை பத்தாண்டுகள் கழித்து சாவகாசமாக படமாக்கி இருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த போது இருந்த அந்த வெடவெடப்பு இல்லாமல் இம்மாதிரி கதைகளை திரையில் பலமுறை ஏற்கனவே பார்த்திருப்பதால் கொஞ்சம் கொட்டாவி தான். நவ இந்தியாவில் சாதி…