Category: எழுத்தாளர்கள்
-
நில். கவனி. எழுது.
“எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம், நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, எப்படி? சொல்கிறேன். …. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருடங்கள் ஆயின. கவனித்தது அத்தனையும் எழுத வேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள், முக்கியமாக மானுடம் வேண்டும். என் கண்ணெதிரில் நடந்த ஒரு சாலை விபத்தில் முதலில் எனக்கு எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லை. எல்லா…
subbudu
-
பதினைந்து ஆண்டுகள்…
எழுத்தாளர் சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை. சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம். ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு? நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா…
subbudu
-
வெளிர் நீலப் புள்ளி
செப்டம்பர் 1977ல் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்திலிருந்து வாயேஜர் என்ற விண்கலத்தை வானில் ஏவினார்கள் நாசா விஞ்ஞானிகள். வாயேஜரின் ஒரே குறிக்கோள் சூரியக் குடும்பத்தையும் அதைச் சுற்றியிருக்கும் விண்வெளியைப் பற்றியும் புரிந்து கொள்வது தான். 90களில் வாயேஜர் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர்கள் தள்ளிப்போய்விட, அது சூரியக்குடும்பத்தை தாண்டிப் போவதற்கு முன், திரும்பி நின்று ஒரு குடும்பப் படமெடுத்து அனுப்பிவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டார் கார்ல் ஸாகன் என்ற விஞ்ஞானி. அப்படி எடுக்கப்பட்ட போது தெரிந்த…
subbudu
-
சென்னையிலிருந்து புத்தகங்கள்
ஜூலை மாதத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிய புத்தகங்களை பிரித்து பார்க்க இப்போது தான் கை வந்தது. மே மாதம் சென்றிருந்த போதே அப்பா, “எதோ புக்கெல்லாம் வந்திருக்கு, போகும் போது எடுத்துண்டு போ” என்று அமேசான் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறந்து போய் வந்துவிட, ஜூலையில் கவர்ந்து கொண்டு வந்தேன். அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகிவிடக்கூடிய சாத்தியம் உடைய புத்தகங்களை அவ்வப்போது பல்வேறு பிரசுரங்களிடமிருந்து ஆர்டர் செய்து வீட்டுக் அனுப்பி, முடிந்த போது ப்ளைட்…
-
நமக்கு ஏன் இசை பிடிக்கிறது?
ஆர்தர் சி. கிளார்க்கின் Childhood’s end என்ற நாவலில், ஆறிவுஜீவிகளான வேற்றுகிரகவாசிகள் சிலர் ஒரு கச்சேரியில் கலந்துகொள்ள பூமிக்கு வருகிறார்கள். கச்சேரியின் இறுதியில், இசையமைப்பாளரை வாழ்த்துகிறார்கள் ஆனால் இன்னும் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மனிதர்கள் இசையை உருவாக்கும்போது அல்லது கேட்கும்போது என்ன நடக்கிறது என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதே இசையைக் கேட்கும் பொழுது அவர்கள் மனதில் எதுவுமே நடப்பதில்லை. அவர்களுக்குள் இசை என்றே ஒன்று இல்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு தங்கள் விண்கலங்களில்…
subbudu