Category: அமெரிக்கா
-
தூக்கியடித்த தமிழ்
படம் – கேசவ் இடம்: சியாட்டில். மணி: காலை ஆறேமுக்கால். கோவிலில் பட்டர் திருப்பாவை படித்த எல்லாரையும் முன்னே வந்து ஒரு அகல் விளக்கேற்ற சொல்கிறார். ஏற்றிய விளக்குகளை ஒரு தட்டில் வைத்து கருவறையில் எடுத்துப் போய் திரையிட்டுக் கொள்ள, ‘அசைந்தாடும் மயில்‘ பாடப்படுகிறது. பாடல் முடிந்தவுடன் ட்யூப்லைட்டுக்கள் அணைக்கப்பட, பிரகாரம் சற்றே இருட்டாகின்றது. கருவறையில் இருந்து மணி அடிக்கிறது. ஓம் நாரயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி என்று பட்டர் சமஸ்கிருதத்தில் காயத்ரி சொல்கிறார். சட்டென்று திரை…
-
வெற்றிமாறனும் விஷால் பரத்வாஜும்
தற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள். இங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ…
-
பெரும்பள்ளம்
எகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது. மக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை…