Category: சினிமா
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 3
3 1950களில் கல்கி பத்திரிக்கை வெளியாகும் வியாழனன்று ரயில் நிலையங்களில் காத்திருந்து, ரயில் நின்றவுடன் அடித்துப் பிடித்து முதல் பிரதியை பிடுங்கி, அங்கேயே பெரிய தூண்களுக்கு அருகில் உட்கார்ந்து பொன்னியின் செல்வனின் அந்த வாரக் கதையை படித்து விட்டு, கை இடுக்கில் சொருகிக் கொண்டு வீட்டிற்கு சென்றவர்கள் ஏராளம். இது உலகமெங்கும் நடந்த விஷயம் தான், சார்லஸ் டிக்கின்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் அத்தியாயங்களாய் எழுதிய போதும், சர் ஆர்தர் கோனன் டாய்லின் ’எ ஸ்கேன்டல் இன் போஹேமியா’…
-
காமாத்திபுராவின் ஒரே பாதை
கங்குபாய் காட்டியாவாடி திரைப்படம் சுமாராய்த் தான் இருந்தாலும், முதல் அரை மணி நேரத்துக்கு திரையிலிருந்து கண்ணை விலக்க முடியாமல் பார்க்க வைத்த பன்சாலிக்கு நன்றிகள் பல. சோகம் அப்பி வழியும் அதே முதல் முப்பது நிமிடங்களில் துல்லியமான மெல்லிசையும், பல வண்ணங்கள் வழிந்தோடும் கலையும் ஒளிப்பதிவும் கவனம் கலைக்க முயன்றாலும், பகீரென்று அடிவயிற்றைக் கலக்கும் திரைக்கதையால் பன்சாலியும், நாளை மலரப்போகும் ரோஜாப்பூ போலச் சன்னமான நாசியுடனும் அழுத்தமான உதட்டுடனும் இருக்கும் கங்குவும்(ஆலியா பட்) தான் மனசில் நிற்கிறார்கள்.…
-
ஒரு என்ஆர்ஐ குறும்படம்
சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சித்தி திரைப்படத்தில் வரும் காலமிது காலமிது என்ற பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போதே தன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஒரு தாய் தன் மகளுக்குச் சொல்லும் நடைமுறை அறிவுரைப் பாடல் அது. அந்தக் கருப்பு வெள்ளைப் பாடல் வெளிவந்த காலமும் தற்போதைய காலமும் தாய்களும் மகள்களும் எப்படி மாறியும் மாறாமலும் இருப்பதைச் சொல்லும் குறும்படம் தான் நண்பர் ஹேமந்த் குமாரின் – காலமிது காலமிது. பொழுது புலர்ந்து,…