Category: சுஜாதா
-
நில். கவனி. எழுது.
“எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம், நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, எப்படி? சொல்கிறேன். …. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருடங்கள் ஆயின. கவனித்தது அத்தனையும் எழுத வேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள், முக்கியமாக மானுடம் வேண்டும். என் கண்ணெதிரில் நடந்த ஒரு சாலை விபத்தில் முதலில் எனக்கு எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லை. எல்லா…
subbudu
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 4
4 கனவென்றால் சும்மா காமா சோமா கனவல்ல. கிட்டத்தட்ட 40 வருடங்களாக வளர்த்திருந்த கனவு. நேற்று புத்தகத்தைப் புரட்டி விட்டு, இன்று காலை வரை மோவாயைத் தடவிக் கொண்டு மோட்டுவளையத்தை பார்த்த பின் எடுத்த முடிவல்ல. மணி ரத்னம் சொன்னது போல, கல்லூரி நாட்களில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் பொ.செ. புத்தகத்தை எடுத்துப் படித்த போது வந்த கனவு. “இதற்காகத் தான் சினிமா எடுக்கவே வந்தேன்” என்ற வாக்கியத்தைத் தவிர எல்லாவற்றையும் சொல்லி விட்டார். 80களில் கமலஹாசனைக்…
subbudu
-
பதினைந்து ஆண்டுகள்…
எழுத்தாளர் சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை. சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம். ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு? நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா…
subbudu
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…
-
ஹாப்பி பர்த்டே வாத்யாரே!
வாத்தியார் இன்று இருந்திருந்தால் அவருடைய இளமையான 86ம் வயதில் ஐபிஎல்லையும், வைரஸையும், மாற்றமில்லாமல் கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுப் போடும் தமிழனையும் பற்றி கற்றதும் பெற்றதும் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார். தமிழில் எழுதப்பட்ட பிரமாதமான coming-of-age நாவலான நிலா நிழல் படித்தவுடன் பிடித்த சுஜாதா பித்து இன்னமும் விட்டபாடில்லை. ஹாப்பி பர்த்டே வாத்யாரே!