Category: மனிதர்கள்
-
நடுநிசி நகக்கடி
ஆஸ்திரேலியா ஓப்பனை சனிக்கிழமை கண்விழித்துப் பார்த்தது வீணாகவில்லை. ராஃபா நடாலும் மேட்வடெவ்வும் ஆடிய ஆண்கள் இறுதிப் போட்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரத்திற்குப் பிறகு நகக்கடியாக முடிந்தது. தன்னை விளையாட விடாததினால் ஜோகோவிச் கோவிச்சுக் கொண்டாலும் இப்பொழுது நிலவும் தொற்று சூழ்நிலைக்குச் சரியே என்று தோன்றியது. ஜோகோ இருந்திருந்தால் இந்தப் போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும். ராஃபாவிற்கு ஆஸ்.ஓப்பன் கைக்கு எட்டாமலேயே இருந்தது. இதை வென்றால் 21வது கிராண்ட் ஸ்லாம் என்ற உலக சாதனை, எதிரில் மேட்வடெவ்…
-
சங்கீதாவா சரவணபவனா?
தமிழில் ஒரு சொல்லின் மூலத்தை அறிய முற்படுவது பல இடங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்லும். போத்தீஸ் வாசலிலோ, டாக்டர் க்ளினிக்கிலோ நேரம் கடத்தும் போது நல்ல பொழுது போக்கு. இல்லையென்றால் வழக்கப்படி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் பார்க்கலாம். இப்படி etymologyயை பற்றி யோசிக்கும் போது தமிழில் இதற்கென இணைய மென்பொருள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ம்ஹூம் அகப்படவில்லை. ஒரு சொல்லை உள்ளிட்டு அதை வேர்ச்சொல்லாக ஆராயும்போது அந்த சொல்லுக்குப் பல விதங்களிலும் இணைக்கப்பட்ட சொற்கள் அந்த…
-
தாத்தாவின் அலமாரி
இன்று இருந்திருந்தால் என் தாத்தா ஓங்கூர் துரைசாமியின் 95வது பிறந்தநாள். அவர் பிறந்தநாளன்று போன் செய்தால், ஆல் த பெஸ்ட் என்று மனதார வாழ்த்தி முடிப்பார். அந்த ஆல் த பெஸ்ட் என்னோடு நிறையவே ஒட்டிக்கொண்டு விட்டது. பிறகொரு நாள் நான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த போது கைகுலுக்கி, ஏதோ ஞாபகத்தில் ஆல் த பெஸ்ட் என்று சொல்லிவிட்டேன். ரஹ்மான் தன் தலையை உயர்த்தி ஒரு நொடி என்னை உற்று நோக்கிய போது தான் புரிந்தது நான் செய்த அபத்தம். அந்த அபத்தத்தைப் பற்றி தனியாக எழுதலாம். பிறந்ததிலிருந்து இருபத்தேழு வயது வரை நான் பாட்டி தாத்தாவின் அருகிலேயே இருந்ததால்…