Category: மனிதர்கள்
-
காமுவும் எக்ஸிஸ்டென்ஷியலிசமும்
எங்கள் வீட்டிலிருந்த காமுவும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் அல்பர்ட் காமுவும் நேரேதிர் துருவங்கள். எ.வீ.காமு வாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன செய்கைகளுக்கும் காரணம் இருப்பதாகவும் அதை தான் உணர்ந்தது போலவும் பேசுவாள். அவள் வாழ்வில் பணத்தை உபயோகித்ததே இல்லை, ஆனாலும் கோவிலுக்குச் சென்றால் வாசலில் யாசிப்பவர்களுக்கு, “ அவாளுக்கு ஏதாவது போட்டுட்டு வந்தா தான் உனக்குப் பலன்” என்பாள். பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் பிஸ்கேட்டின் ஓரமெல்லாம் கடித்து விட்டு நடுவில் பிரிட்டானியா என்று எழுதியிருப்பதை உடைக்காமல் கடைசிவரை வைத்திருப்பது எப்படி…
-
இரு டிபன்களும் இருபது வருடங்களும்
2003ல் சிகாகோவில் இருந்த போது ஒரு வாரயிறுதியில், இரவுணவிற்குப் பின் ஏழெட்டு நண்பர்களுடன் கிளம்பி விஸ்கான்சின் மாகாணத்தில் இருக்கும் மேடிசன் என்னும் நகருக்கு காரில் சென்றோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் பயணம். இரண்டு கார்களில் கிளம்பி நாங்கள் சென்றது, ஒரு நண்பரின் வீட்டிற்கு. நண்பர் என்றால் எங்களுடன் வந்த ஷங்கர் என்பவனின் நண்பர். ப்ரண்டோட ப்ரண்ட். வேறு யாரும் அவரை முன்பின் பார்த்தது கூட கிடையாது. மேடிசன் போய் சேர்ந்த போது நள்ளிரவாயிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட்டில் ஷங்கரின்…
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 3
3 1950களில் கல்கி பத்திரிக்கை வெளியாகும் வியாழனன்று ரயில் நிலையங்களில் காத்திருந்து, ரயில் நின்றவுடன் அடித்துப் பிடித்து முதல் பிரதியை பிடுங்கி, அங்கேயே பெரிய தூண்களுக்கு அருகில் உட்கார்ந்து பொன்னியின் செல்வனின் அந்த வாரக் கதையை படித்து விட்டு, கை இடுக்கில் சொருகிக் கொண்டு வீட்டிற்கு சென்றவர்கள் ஏராளம். இது உலகமெங்கும் நடந்த விஷயம் தான், சார்லஸ் டிக்கின்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் அத்தியாயங்களாய் எழுதிய போதும், சர் ஆர்தர் கோனன் டாய்லின் ’எ ஸ்கேன்டல் இன் போஹேமியா’…