Category: இசை
-
உசிர் உதடு மற்றும் சுழி
படம் வெளிவர ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கும் மணி ரத்னத்தின் ஹைப் மெஷின், ஆரம்பித்தாயிற்று. இனிமேல் மனிதர் எல்லா பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளிப்பார், படத்தை பற்றிய கிசுகிசு வர ஆரம்பிக்கும், முப்பது நொடி படத்தை காட்டி கவர்ந்திழுப்பார். ராவணன் இசை கேட்க சுவாரசியமாயில்லை. ராவணனின் ட்ரைலரை பார்த்தால் காட்டுத் த்ரில்லர் போல இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி ரஹ்மான் வித்தியாசமாய் இசையமைத்திருக்கிறார். ஆனாலும் வைரமுத்து வரிகளுக்கு கார்த்திக் பாடியிருக்கிற உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம்…
-
சென்னையில் ஒரு இசைக் காலம்
சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது. ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை…
-
ஓடவைக்கும் பாடல்
டண்டடன் டட டடைன் கேட்டீர்களா ? ராஸ்கல்கள் அதாவது கமினே படத்தில் வரும் பஞ்சாபி க்ளப் இசைப் பாடல். சங்கர் மகாதேவன் கண்டுகோண்டேன்*2 படத்தில் என்ன சொல்லப் போகிறாய் பாடியபோது இருந்த ஒருவித ஜுர வேகம், சுக்வீந்தர் சிங் பாடியுள்ள இந்தப் பாடலிலும் இருக்கிறது. நம்பாவிட்டால் ஐபாடிலோ அல்லது எதையாவதையோ காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சம் நேரம் ஓடுங்கள்/நடங்கள். பாட்டு முடிந்தவுடன்,ரீவண்ட் செய்து மீண்டும் ஓடுங்கள். மீண்டும். கமலின் சீமந்தபுத்ரி ஸ்ருதியின் உன்னைப்போல் ஒருவன் இசை சுமாராயிருக்கிறது.…
-
Mexican இரவுக்கு Lexicon நான்தானடா !!
http://odeo.com/flash/audio_player_tiny_black.swf தசாவதாரத்தின் பாடல்களின் மூலம் வாங்கி கட்டிக் கொண்ட ஹிமேஷ் ரேஷ்மய்யா, கா கருப்பனுக்கும் பாடலின் மூலம் கொஞ்சமாவது புண்ணியம் தேடிக் கொண்டார். சின்மயியின் முத்தம் தின்பவளைப் போலவே ஷாலினி சிங்கின் குரலும் மிகக் கச்சிதம். வைரமுத்துவின் பாடல் வரிகளும் were right on the spot [இருபது வயதிற்குள் அறுபது சிருங்காரங்கள்…]. சமீபமாக ஜிம்மில் இந்தப் பாட்டும் நானும் ரொம்ப நேரம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
-
தசாவதாரம் – பாடல்கள்
மாற்றம் இல்லாததால் ஏமாற்றம். முகுந்தா முகுந்தாவில் மட்டும் சாதானா சர்கம் தெரிகிறார். இந்தப் பாடலில் கடைசியாக மொட்டைப் பாட்டியாக பாடும் கமலின் குரல் அவ்வளவு சிலாக்கியமில்லை. கல்லை மட்டும் பார்த்தால் பாடலின் கடைசி நிமிடத்தில் ஹரிஹரன், பாடலுக்கு ஜஸ்டிஸ் செய்கிறார். இப்படி எல்லாம் தேடித் தேடி நல்ல இடங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. கமல் பாடும் ஓ சனம் என்னும் செண்டி பாங்கராவை கடைசி வரை கேட்க முடியவில்லை. இதற்காகவா அந்த ஹிமேஷ் ? நம்ம ஸ்ரீகாந்த் தேவா…