Category: பத்திரிக்கை
-
படிப்பது – ஸ்லேட்
நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட்…
-
குமுதத்தில் ஞாநி
குமுதம் தவிர மற்ற இதழ்கள் தீம்தரிகிட இதழில் வரும் கட்டுரைகளை பயன்படுத்தலாம் என்று specificகாக ஃபைன் பிரிண்ட் போடும் அளவுக்கு, குமுதத்துக்கு எதிராக இருந்த எழுத்தாளர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுகிறார், என்றவுடன் விஷயமிருக்கும் என்று நினைத்தேன். இருக்கிறது. ஓ பக்கங்களுக்கு முன்னமே அவர் எழுதி, சொல்ப பிரதிகளே விற்ற தீம்தரிகிடவின் வாசகன் என்ற அளவில் எனக்கு ஞாநியின் நேர்மையான கருத்துக்கள் பிடிக்கும். சிலதில் ஒற்றுப்போக முடியாவிட்டாலும்(எம்.எஸ் அஞ்சலிக் கட்டுரை – தீம்தரிகிட) அவர் சொல்ல…
-
எவ்ளோ படிப்பது ?
சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள். பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும்…