Category: புத்தகம்
-
இரண்டு வேலைக்காரர்கள்
போன வாரம் நெட்ஃபிளிக்ஸில் இரண்டு திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. ஒன்று White Tiger, மற்றொன்று Sir. இரண்டு திரைப்படங்களின் கதைகளிலும் நாயகர்கள் இந்தியாவில் எங்கும் பார்க்ககூடிய சாராசரியான வேலைக்காரர்கள். அரவிந்த் அடிகா எழுதி 2008ல் புக்கர் பரிசு பெற்ற வொயிட் டைகர் நாவலை பத்தாண்டுகள் கழித்து சாவகாசமாக படமாக்கி இருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த போது இருந்த அந்த வெடவெடப்பு இல்லாமல் இம்மாதிரி கதைகளை திரையில் பலமுறை ஏற்கனவே பார்த்திருப்பதால் கொஞ்சம் கொட்டாவி தான். நவ இந்தியாவில் சாதி…
-
நூலக ஞாபகம்
அஷ்வினுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சிறுவயதில் தனியாக வீட்டில் நூலகம் நடத்தியது ஞாபகம் வந்தது. ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அந்த கோடை விடுமுறையில் திடீரென்று கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் போட்டு ஒரு நூலகம் வைத்து சம்பாதிக்கலாம் என்று ஏனோ தோன்றியது. காரணம் சரியாக ஞாபகம் இல்லை. எங்கேயாவது படித்ததாலோ அல்லது “அவனப் பாரு, எப்படி சூட்டிகையா இருக்கான்” என்று யாரையோ காட்டி விட்டுப் பெரியவர்களில் யாரோ சொன்னதாலோ இருக்கலாம். நாங்கள் இருந்த அந்த புரசைவாக்க வெள்ளாளத்…