Category: புத்தகம்
-
பதினைந்து ஆண்டுகள்…
எழுத்தாளர் சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை. சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம். ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு? நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா…
subbudu
-
சென்னையிலிருந்து புத்தகங்கள்
ஜூலை மாதத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிய புத்தகங்களை பிரித்து பார்க்க இப்போது தான் கை வந்தது. மே மாதம் சென்றிருந்த போதே அப்பா, “எதோ புக்கெல்லாம் வந்திருக்கு, போகும் போது எடுத்துண்டு போ” என்று அமேசான் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறந்து போய் வந்துவிட, ஜூலையில் கவர்ந்து கொண்டு வந்தேன். அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகிவிடக்கூடிய சாத்தியம் உடைய புத்தகங்களை அவ்வப்போது பல்வேறு பிரசுரங்களிடமிருந்து ஆர்டர் செய்து வீட்டுக் அனுப்பி, முடிந்த போது ப்ளைட்…
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 2
2 மணி ரத்னத்தின் எந்தப் படம் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் விமர்சனம் வந்தே தீரும் என்பதைக் கடந்த மூன்று பத்தாண்டுகளில் பார்த்திருக்கலாம். விமர்சகர்களும் அ-விமர்சகர்களுக்கும் ஒரு ஏற்ற இலக்காக அவர் படங்கள் இருப்பதே காரணம். ஆளாளுக்கு அல்வா கிடைத்த மாதிரி பந்தாடித் தீர்ப்பார்கள். அவரின் பிரபலம் அவருடைய எல்லா படத்துக்கும் ஒரு விதமான liability தான். முதலில் மெளன ராகத்திற்கு பிறகு ”தமிழ் நாட்டில் விவாகரத்து கேஸ்கள் அதிகமாகிறது” என்றார்கள். பிறகு அஞ்சலியில் ”வயதுக்கு மீறி மைனர்…
subbudu
-
முராகமியின் டீஷர்ட்
நான் எழுதிக் கொடுத்தால் என் வீட்டு சலவைக் கணக்கைக் கூட பதிப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று ஒருமுறை நகைச்சுவையாக எழுதியிருந்தார் சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். ஜப்பானையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர். இவர் எழுதினால் யாரும் எதை வேண்டுமானாலும் பதிப்பிக்க ரெடி. முராகமி கொஞ்சம் விவகாரமான ஆசாமி. அவர் எழுத்தைப் போலவே கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் தான் சேகரித்து வைத்திருக்கிற டீஷர்ட்டுகளை பற்றி ஒரு புத்தகம் போட்டார்.…
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…