Category: பதிவுகள்
-
பா
1 அவன் சிறுவனாய் இருந்த போது அப்பா தன் பால்ய கதைகளைச் சொன்னதுண்டு. காலையில் எழுந்து, கடலூரில் போக்குவரத்து நிறைந்த பகுதியிலிருந்த ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்தது பற்றி. பத்து வயதில் அவரின் அப்பா தவறியவுடன், தன் அத்தையின் ஓட்டலில் காலை 4:30 மணிக்குச் சாம்பிராணி போட்டுக் கடை திறப்பது அவரின் வேலையானது. என்ன தான் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து வருகிற போகிறவர்களிடம் பில் காசை வாங்கி சில்லறை திருப்பிக் கொடுப்பது என்பது வேலையென்றாலும் அதை…
-
காமாத்திபுராவின் ஒரே பாதை
கங்குபாய் காட்டியாவாடி திரைப்படம் சுமாராய்த் தான் இருந்தாலும், முதல் அரை மணி நேரத்துக்கு திரையிலிருந்து கண்ணை விலக்க முடியாமல் பார்க்க வைத்த பன்சாலிக்கு நன்றிகள் பல. சோகம் அப்பி வழியும் அதே முதல் முப்பது நிமிடங்களில் துல்லியமான மெல்லிசையும், பல வண்ணங்கள் வழிந்தோடும் கலையும் ஒளிப்பதிவும் கவனம் கலைக்க முயன்றாலும், பகீரென்று அடிவயிற்றைக் கலக்கும் திரைக்கதையால் பன்சாலியும், நாளை மலரப்போகும் ரோஜாப்பூ போலச் சன்னமான நாசியுடனும் அழுத்தமான உதட்டுடனும் இருக்கும் கங்குவும்(ஆலியா பட்) தான் மனசில் நிற்கிறார்கள்.…
-
பெளதிக ஜல்லி
டென்னிஸ் ஆட்டக்காரர்கள் ஒரு சர்வ் செய்யும் முன் பந்தை ஏன் அத்தனை முறை கீழே அடிக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா? சுலபமான கேள்விகளுக்கு என்றுமே கடினமான பதில்கள் தான். இதற்குப் பல விதமான காரணங்கள் இருந்தாலும் கொஞ்சம் பெளதிகம் பக்கம் போய் ஜல்லியடிக்கலாம். முதலில், மற்ற காரணங்கள் – ரொம்பவும் சிம்பிளாக பல ஆட்டக்காரகளுக்கு அது ஒரு சடங்கு. டென்னிஸ் ஆட ஆரம்பிக்கும் போது கற்றுக்கொள்ளும் பால பாடம், பந்தை சரியாக பவுன்ஸ் செய்து மட்டையில் பட வைத்தல்.…