Category: எழுத்தாளர்கள்
-
முராகமியின் டீஷர்ட்
நான் எழுதிக் கொடுத்தால் என் வீட்டு சலவைக் கணக்கைக் கூட பதிப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று ஒருமுறை நகைச்சுவையாக எழுதியிருந்தார் சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். ஜப்பானையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர். இவர் எழுதினால் யாரும் எதை வேண்டுமானாலும் பதிப்பிக்க ரெடி. முராகமி கொஞ்சம் விவகாரமான ஆசாமி. அவர் எழுத்தைப் போலவே கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் தான் சேகரித்து வைத்திருக்கிற டீஷர்ட்டுகளை பற்றி ஒரு புத்தகம் போட்டார்.…
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…
-
இன்ன பிற – தேசபக்திக்காக ஒரு தடுப்பூசி
போன மாதம் ஆப்கானிஸ்தானில் சரித்திரம் புரண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இந்தியர்கள் ஜனகணமன பாடி, சாக்லெட்டை விழுங்கி, அதன் ப்ளாஸ்டிக்கை கசக்கி கீழே போட்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்தும் அச்சுபிச்சுத்தனமாக இரவில் வாங்கினோம் இன்னமும் விடியவேயில்லை என்று பேசிக்கொண்டிருக்கும் திராபைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவைப் போல் ஒரு சுதந்திரமான நாடு எங்குமேயில்லை. தனி மனித சுதந்திரத்தை நாம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டோம். எந்த…
-
ஹாப்பி பர்த்டே வாத்யாரே!
வாத்தியார் இன்று இருந்திருந்தால் அவருடைய இளமையான 86ம் வயதில் ஐபிஎல்லையும், வைரஸையும், மாற்றமில்லாமல் கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுப் போடும் தமிழனையும் பற்றி கற்றதும் பெற்றதும் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார். தமிழில் எழுதப்பட்ட பிரமாதமான coming-of-age நாவலான நிலா நிழல் படித்தவுடன் பிடித்த சுஜாதா பித்து இன்னமும் விட்டபாடில்லை. ஹாப்பி பர்த்டே வாத்யாரே!
-
வாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலின் குடமுழுக்கை 144ஐ போட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தி நல்ல வெயில் அடிக்கும் நாளில் பிரகாசமாய், பிரமாதமாய் நடத்தியதை பொதிகையில் காணப்பெற்றேன். இந்த தொற்று நாட்களில் இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்க்கமுடியாதது தான். தொற்று பற்றற்று போனவுடன் கும்பாபிஷேக கோயிலை போய் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பலப்பல ட்ரோன்கள் சமேதமாக சுத்தி சுத்தி விமானத்தையும் ராஜ கோபுரத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல. பொதிகையில் கொஞ்சம் சத்தமாய் கூடவே உரை…