Category: அமெரிக்கா
-
இரு டிபன்களும் இருபது வருடங்களும்
2003ல் சிகாகோவில் இருந்த போது ஒரு வாரயிறுதியில், இரவுணவிற்குப் பின் ஏழெட்டு நண்பர்களுடன் கிளம்பி விஸ்கான்சின் மாகாணத்தில் இருக்கும் மேடிசன் என்னும் நகருக்கு காரில் சென்றோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் பயணம். இரண்டு கார்களில் கிளம்பி நாங்கள் சென்றது, ஒரு நண்பரின் வீட்டிற்கு. நண்பர் என்றால் எங்களுடன் வந்த ஷங்கர் என்பவனின் நண்பர். ப்ரண்டோட ப்ரண்ட். வேறு யாரும் அவரை முன்பின் பார்த்தது கூட கிடையாது. மேடிசன் போய் சேர்ந்த போது நள்ளிரவாயிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட்டில் ஷங்கரின்…
-
பாண்டமிக் பப்பி
”நேற்று ஜீனோ ஜீனோ தான் என்றெல்லாம் சொன்னாயே, நீ ஏன் இன்னமும் ஒரு நாய்க்குட்டி எல்லாம் வாங்கல?” என்று நண்பர் ஒரு வாட்ஸ்அப்பில் கேட்டிருந்தார். போன இரண்டு வருடங்களில் வீட்டிலிருந்த போது செய்வதறியாது, பல நண்பர்கள் பாண்டமிக் பப்பிக்களை வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு முன்பின் நாய்களை வளர்க்காத இரண்டு நண்பர்கள் வாங்கியிருப்பதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த தொற்று காலத்தில் சட்டென விலையேறிப் போன வஸ்துக்கள் மூன்று – டாய்லெட் பேப்பர், வீடு மற்றும் நாய்க்குட்டிகள். ஒரு ஆறு…
-
ஒரு என்ஆர்ஐ குறும்படம்
சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சித்தி திரைப்படத்தில் வரும் காலமிது காலமிது என்ற பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போதே தன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஒரு தாய் தன் மகளுக்குச் சொல்லும் நடைமுறை அறிவுரைப் பாடல் அது. அந்தக் கருப்பு வெள்ளைப் பாடல் வெளிவந்த காலமும் தற்போதைய காலமும் தாய்களும் மகள்களும் எப்படி மாறியும் மாறாமலும் இருப்பதைச் சொல்லும் குறும்படம் தான் நண்பர் ஹேமந்த் குமாரின் – காலமிது காலமிது. பொழுது புலர்ந்து,…
-
கரோனாவாசம்
போன வருடம் பிப்ரவரி 29ம் தேதி அமெரிக்காவின் முதல் கரோனா(கொரோனா அல்ல) துக்கம் நடந்தது என் வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில். ஆறு மைல் தள்ளி இருக்கும் கர்க்லாண்டில் அகாலமாய் அந்த மரணம் நிகழ அமெரிக்காவே வாய் திறந்து பார்க்க, இந்தியன் ஸ்டோரில் மில்க்பிக்கீஸ் வாங்கப் போனவன் இந்த நியூஸ் கேட்டு இன்னும் இரண்டு பாக்கெட்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அதன் பிறகு உலகத்தில் நடந்தது எல்லாம் வரலாற்றுப் புத்தகங்களுக்கானது. வைரஸ் வந்து, எல்லோரும் பீதியில் உறைந்து…