Category: சியாட்டல் டைரி
-
கரோனாவாசம்
போன வருடம் பிப்ரவரி 29ம் தேதி அமெரிக்காவின் முதல் கரோனா(கொரோனா அல்ல) துக்கம் நடந்தது என் வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில். ஆறு மைல் தள்ளி இருக்கும் கர்க்லாண்டில் அகாலமாய் அந்த மரணம் நிகழ அமெரிக்காவே வாய் திறந்து பார்க்க, இந்தியன் ஸ்டோரில் மில்க்பிக்கீஸ் வாங்கப் போனவன் இந்த நியூஸ் கேட்டு இன்னும் இரண்டு பாக்கெட்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அதன் பிறகு உலகத்தில் நடந்தது எல்லாம் வரலாற்றுப் புத்தகங்களுக்கானது. வைரஸ் வந்து, எல்லோரும் பீதியில் உறைந்து…
-
தூக்கியடித்த தமிழ்
படம் – கேசவ் இடம்: சியாட்டில். மணி: காலை ஆறேமுக்கால். கோவிலில் பட்டர் திருப்பாவை படித்த எல்லாரையும் முன்னே வந்து ஒரு அகல் விளக்கேற்ற சொல்கிறார். ஏற்றிய விளக்குகளை ஒரு தட்டில் வைத்து கருவறையில் எடுத்துப் போய் திரையிட்டுக் கொள்ள, ‘அசைந்தாடும் மயில்‘ பாடப்படுகிறது. பாடல் முடிந்தவுடன் ட்யூப்லைட்டுக்கள் அணைக்கப்பட, பிரகாரம் சற்றே இருட்டாகின்றது. கருவறையில் இருந்து மணி அடிக்கிறது. ஓம் நாரயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி என்று பட்டர் சமஸ்கிருதத்தில் காயத்ரி சொல்கிறார். சட்டென்று திரை…
-
ஞாயிறு
[#] கிழமையும் தான். ஆனால் முக்கியமாக, கதிரவன் aka சூரியன் பற்றி. சியாட்டலில், போன வீக்கெண்ட் தான் இந்த வருடத்தின் முதல் சூரிய வீக்கெண்ட். Sunny. வெயிலடிப்பதே மறந்து போன நிலையில் போன வாரமும் வாரக் கடைசியிலும், சூரியனின் பார்வை பட்டது சந்தோஷமே. Sun comes out and the country freaks out என்பதில் உள்ள உண்மைப் புரிகிறது. குளிரிலும் ரிசஷன் பயத்திலும் உறைந்து போயிருந்தவர்கள், சூரியனைப் பார்த்தவுடன், கண்மண் தெரியாமல் குளுர் ஜாக்கெட்டைத் துறந்து,…