Category: புகைப்படம்
-
இயேசுநாதரும் பி.சி. ஸ்ரீராமும்
இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது. பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது. வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார். ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள். சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து…
-
சிகாகோ
போன வாரம் சிகாகோ போயிருந்த போது, நெருக்கடி அடிதடி என எல்லாம் நிறைந்த நகரத்தின் நடுவே இருக்கும் மில்லேனியம் பூங்காவில் எடுத்த படமிது. பெரிய படத்தைப் பார்த்தாவது படமெடுப்பவர் எங்கே என்று யாராவது யூகிக்கலாம்.
-
சென்னை க்ளிக்
நான்கு மாதத்திற்கு முன் சென்னை சென்றிருந்த போது, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிக்கானில் க்ளிக்கினேன். வண்டியை ஓட்டிய ஆட்டோகாரர்களும், கால் டாக்ஸிகாரர்களும் நொந்து போனது மற்றொரு செய்தி. அந்த புகைப்படங்களை அப்லோட் செய்ய இவ்வளவு நாளாகிவிட்டது. அப்படி ஒன்றும் சிலாகித்துக் கொள்கிற மாதிரி படங்களில்லை. ஆனாலும் சென்னையை கொஞ்சமாய் அள்ளிக் கொண்டு வந்ததில் சந்தோஷம். லேசி லென்ஸில்[ப்ராட்பேண்ட் தேவை] கொஞ்சமாய் செலக்டட் படங்கள் அல்லது ஃபிளிக்கரில் எல்லா படங்களுடன்(மத்தியில் உள்ள iயை அழுத்தினால் செய்தியுடன் புகைப்படங்கள்).
-
தேவன் வருகை
வெள்ளிக்கிழமை அன்று, ஆபீசில் இருந்த அனேகர் கிளம்பிய பின்னர், கடலை பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சமாய் இருட்ட ஆரம்பித்தது. சடசடவென ஒரு 10-15 நிமிடத்தில், கொஞ்சம் நன்றாக இருட்டி, மேகத்தின்னூடே சூரிய கதிர்கள் வர ஆரம்பித்தன. புதுசாய் வாங்கிய காமிராவை பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த எனக்கு கொண்டாட்டம். ஒரு இருபது போட்டோக்கள் எடுத்து தள்ளினேன். ஒரு ஆறு தான் தேறியது. அதை வைத்து தேவன் வருகை என கதை சொல்ல முடியும். ஃப்ளிக்கரில். அந்த ப்ளு டிஞ்ச் இருட்டை…