Category: இயந்திரா
-
இயந்திரா 1 – இப்ப ராமசாமி
கொஞ்ச நாட்களாகவே இயந்திரா என்று இன்றைய விஞ்ஞானம்/வர்த்தகம்/தொழில்நுட்பம் பற்றி ஒரு வாரப்பத்தி எழுத எண்ணம். ஆலன் கே (Alan Curtis Kay) என்ற கணினி விஞ்ஞானி சொன்னது போல டெக்னாலஜி என்பது நீங்கள பிறந்த பின்பு உருவாக்கப்பட்டவையே (Technology is anything that was invented after you were born.). லூமியர் பிரதர்கள் உருவாக்கிய சினிமா புரஜக்டெர் எல்லாம் வரலாறு தான். இன்று காலை நீங்கள் ஷேவ் செய்யும் போது, ஜேம்ஸ் காமரூன் அறிமுகப்படுத்திய ஸ்டீரியோஸ்கோபிக்…
-
தமிழில் எழுத !!
சில மாதங்களுக்கு முன்னர், ஹிந்திக்கு transliteration அறிமுகப்படுத்திய கூகிள் சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் எழுதும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் தமிழில் டைப் செய்ய ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பு தவிர font, client application என்று ஒரு புண்ணாக்கும் தேவையில்லை. மேலே உள்ள ‘சுத்த டமில்’ பாடலை எழுதியதும், Google Transliteration – தமிழில் தான். என்ஜாய்.
-
இயந்திர பித்து – நிக்கானியன்
ஒரு பத்து வருடங்களுக்கு முன் நானும் எனது நண்பன் செந்திலும், வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் பேசிக் கொண்டிருந்த போது, “மச்சான் !! நான் படமெடுத்தன்னா நீ தாண்டா காமிராமேன்” என்றான். அதற்கு முன்னால் அவ்வப்போது மற்றொரு நண்பனின் போட்டோ ஸ்டூடியோவில், உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், டார்க் ரூம், 400 கவுண்ட், ப்ளாஷ் ஸின்க் என்று காதில் விழுந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு அண்ணா என்னை வைத்து ஒரு க்ளோஸ்-அப் எடுத்தார். அது கொஞ்சம் நன்றாக…
-
இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி
எழுதியது ஆனந்த் கிரிதர்தாஸ் என்ற இந்தியனாதலால் ஒரு மெலிதான biasயுடன் எழுதப்பட்டதோ என்று தோன்றினாலும், எழுதியிருப்பதில் பாதி உண்மை இருந்தால் கூட இது வளர்ச்சி தான். நியுயார்க் டைம்ஸில் வந்த இந்தியாவின் அவுட்சோர்சிங் வளர்ச்சி பற்றிய கட்டுரை, விரியும் தொழில்நுட்ப எல்லைகளை பற்றிய ஒரு அபார ரிப்போர்ட். படித்தால் மகிழ்வீர்கள்.
-
இயந்திர பித்து
2005 தாங்ஸ்கிவ்விங்[thanksgiving] அன்று, காம்ப் யு.எஸ்.ஏ சென்று நடுநிசியில் நின்றது போன்ற அனுபவம் சென்னையிலும் கிடைக்காது. போனது எதுவும் வாங்குவதற்கல்ல. அந்த ஷாப்பிங் அனுபவத்திற்காக. கண்டிப்பாய் கிடைப்பதரிது. வருங்காலத்தில் யாராவது கேட்டால், “டேய் நான் கூட பனியில வெடவெடன்னு வாய் டைப்படிக்க, அந்த பெரிய லைன்ல நின்னுகிறேன்” என்று மார் தட்டலாம். எந்த கடைக்குப் போனாலும், தாங்ஸ்’கிவ்விங்’ என்று கையில் உள்ள காசத்தனையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறார்கள். அந்த வகையில் அது ஒரு பந்தா அனுபவம்.…