Category: சென்னை
-
சென்னையில் ஒரு இசைக் காலம்
சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது. ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை…
-
சுஜாதாட்ஸ் – 3
”குட்மார்னிங் ஸார்!” மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான். பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள். மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட…
-
தீபாவளி நினைவுகள்
இந்த சியாட்டல் தீபாவளி ஏற்கனவே முடிந்து விட்டது. போன வாரம், வேறு கவுண்டியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் சிகரெட் லைட்டரால் ஒரு அடி மத்தாப்பு ஏற்றி, பாம்பு மாத்திரை கொளுத்தி, புஸ்வானம் விட்டு, மைக்ரோவேவ் திரட்டிப்பால் சாப்பிட்டு கிருஷ்ணனையும் நரகாசுரனையும் நினைத்துக் கொண்டேன். அண்டை வீட்டார் புகை வருவதைப் பார்த்து, கலிபோர்னியா காட்டுத் தீயென பயந்து வெளியே எட்டிப் பார்த்தார்கள். சென்னையில் பால்ய தீபாவளி கொண்டாடிய பொழுது, பட்டாசுக்காக சாப்பாடு துறந்தது பல முறை. அம்மா…
-
முப்பது மெட்ராஸ் நாட்கள்
இரண்டு வருடங்களுக்குப் பின் கடும் அக்னி நட்சத்திரத்தின் நடுவே, இந்த வருடம் சென்னை சென்றிருந்த போது கண்ட விஷயங்கள் இவ்விவை. மீனம்பாக்கத்தில் வளைத்து வளைத்து பாலம் கட்டுகிறார்கள். ஆங்காங்கே தகரம் பெயர்ந்து ரோட்டில் நீட்டிக் கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் ஆட்டோ-ப்ரேக்குகலோடு ட்ராலி அழகாக அடுக்கி இருக்கின்றன. எக்கச்சக்கமாக பார்கிங் சார்ஜ் போடுகிறார்கள். சென்னையில் ட்ராபிக் அதிகமாகிவிட்டது. எல்லோரும் வண்டியை ‘வள்ச்சி ஓட்டிகினே’ போய்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் பல ஆயிரம் கார்கள் வானத்தில் இருந்து கொட்டிய மாதிரி இருக்கிறது.…
-
சென்னை க்ளிக்
நான்கு மாதத்திற்கு முன் சென்னை சென்றிருந்த போது, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிக்கானில் க்ளிக்கினேன். வண்டியை ஓட்டிய ஆட்டோகாரர்களும், கால் டாக்ஸிகாரர்களும் நொந்து போனது மற்றொரு செய்தி. அந்த புகைப்படங்களை அப்லோட் செய்ய இவ்வளவு நாளாகிவிட்டது. அப்படி ஒன்றும் சிலாகித்துக் கொள்கிற மாதிரி படங்களில்லை. ஆனாலும் சென்னையை கொஞ்சமாய் அள்ளிக் கொண்டு வந்ததில் சந்தோஷம். லேசி லென்ஸில்[ப்ராட்பேண்ட் தேவை] கொஞ்சமாய் செலக்டட் படங்கள் அல்லது ஃபிளிக்கரில் எல்லா படங்களுடன்(மத்தியில் உள்ள iயை அழுத்தினால் செய்தியுடன் புகைப்படங்கள்).