Category: பயாஸ்கோப்
-
நலம். நலமறிய ஆவி.
13பியில் யாவரும் நலம் என்கிற யாவரும் நலம் மிகவும் ’வித்தியாசமான’ தமிழ்ப் படம். வித்தியாசமான என்றவுடன் காசியில் எடுத்ததா, ஹீரோவுக்கு பேச முடியாதா, க்ளைமாக்ஸில் பிழிய பிழிய சோகமா என்கிற மாதிரி எல்லாம் வித்தியாசமில்லை. அதற்கெல்லாம் ஒரே படத்தை நான்கைந்து வருடங்கள் எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், சாதா கதையை ஸ்பெஷல் சாதாவாக மாற்றிய கதாசிரியருக்கும்/இயக்குனருக்கும்(விக்ரம் குமார்) ஒரு ஷொட்டு(குமுதம் வாசனை!). யாவரும் நலம் சரியாக எடுக்கப்பட்ட ‘பேய்ப் படம்’. அதைப் பேய்ப் படமாவே முடித்தது…
-
இன்னபிற
சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி. ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம்…
-
அரை(குறை)வரி விமர்சனங்கள்
சாவுக்கு ‘கிராக்கி’ – இறந்த தகப்பனின் உடலை வீட்டின் நடுவே கிடத்தி விட்டு, மகன்கள் போடும் ரொம்பவே காமெடியான கலாட்டா. கொஞ்சம் ப்ளாக் காமெடி வகையாய் இருந்தாலும், கிரேஸி மோகன், மாதவன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அசின், குள்ளமணி என கலந்தடித்தால் கண்டிப்பாய் வெள்ளி விழா. அந்த நிர்வாண மாப்பிள்ளையாக, நட்புக்காக கமல். பிடிச்சிருக்கு – யாரோ டைரக்டர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர். சாதாரணமான க்ளாசிக் லவ் ஸ்டோரி. ஆனாலும் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்த்ததால் பிடித்திருந்தது. பாடல்களின் படப்பதிவில்…