அரை(குறை)வரி விமர்சனங்கள்

death_at_a_funeral.jpg

சாவுக்கு ‘கிராக்கி’ – இறந்த தகப்பனின் உடலை வீட்டின் நடுவே கிடத்தி விட்டு, மகன்கள் போடும் ரொம்பவே காமெடியான கலாட்டா. கொஞ்சம் ப்ளாக் காமெடி வகையாய் இருந்தாலும், கிரேஸி மோகன், மாதவன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அசின், குள்ளமணி என கலந்தடித்தால் கண்டிப்பாய் வெள்ளி விழா. அந்த நிர்வாண மாப்பிள்ளையாக, நட்புக்காக கமல்.

பிடிச்சிருக்கு – யாரோ டைரக்டர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர். சாதாரணமான க்ளாசிக் லவ் ஸ்டோரி. ஆனாலும் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்த்ததால் பிடித்திருந்தது. பாடல்களின் படப்பதிவில் பின்னி எடுக்கிறார் டைரக்டர் கனகு. சபாஷ்.

நிஜவாழ்க்கையில் டான் – ஸ்டீவ் கேரால் நடித்திருப்பதால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாற்றிய சராசரி ஹாலிவுட் படம்.

கண்முடித்தனமான காதல் – எதோ இந்திய நடிகை இருந்ததாலும், ட்ரைலர் சுவாரசியமாய் இருந்ததாலும், படம் பார்த்து ஒன்றரை மணி நேரம் வீண். ஹாலிவுட் படத்திலும் மகள்கள் காதலித்தால், இந்தியத் தகப்பன்கள் பல்லைக் கடிக்கிறார்கள்.

இவைத் தவிர இன்னும் இரண்டு மூன்று படங்கள் பார்த்து மறந்து போய் விட்டது. கொஞ்சம் நாட்களுக்கு சினிமா பார்க்கப் போவதில்லை. இனிமேல் தசாவதாரத்திற்கும், இண்டியானா ஜோன்ஸிற்கும் தான் கைக்காசை செலவழிக்கப் போவதாய் முடிவு.

Create a website or blog at WordPress.com