Category: சுஜாதா
-
மாதா, பிதா, சுஜாதா
கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எழுதினால், சுஜாதா என்கிற ரியலிஸ்ட், தமிழனின் உணர்ச்சிவசப்படும் குணம் என்பார். என்ன…எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒன்றும் புரியாத நிலையில், இப்போதைக்கு எதுவுமே எழுதாமல் இருப்பது சரி என்றே தோன்றுகிறது. கமல் அவரது அஞ்சலியில் சொன்னது போல், பிச்சைக்காரர்கள் தர்மம் கொடுக்கும் இடத்துக்குத் தான் மீண்டும் மீண்டும் செல்வார்கள். அதைப் போல் அவர் எழுத எழுத புரிந்து கொண்டதை, விட்டு விட முடியும் என்று தோன்றவில்லை. அதனால், விண் நாயகன் என்றொரு…
-
சுஜாதா – ஹெட்போன் ஹெட்லைன்
தேசிகனின் வலைப்பதிவில் எழுத்தாளர் சுஜாதாவின் உடல்நிலை பற்றி வந்திருந்த செய்தி, மனதை வருத்தியது. சுஜாதா உடல்நிலை தேறிவருகிறார் என்பது தற்போது நல்ல செய்தி. அந்த பதிவில், புன்னகைக்க வைத்த பத்தி – “சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்” “ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம்…
-
எவ்ளோ படிப்பது ?
சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள். பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும்…
-
அறிமுக ப்ரேரரக்
சுஜாதா ஒர் எளிய அறிமுகத்தை, அறிமுகப்படுத்த மட்டுமே முடிந்தது. தினமும் சுஜாதாவை படிப்பதால், போகிற போக்கில் எழுதி விடலாம் என்று நினைத்தால், கல். அந்த குட்டி பயோகிராபிக்கு, பதினைந்து புத்தகங்களை வைத்து கொண்டு நோட்ஸெடுத்து, connecting the dots செய்வதற்குள் ஆறு மணிநேரமாகி விட்டது. வார இறுதியில், பல மாதங்களுக்கு பிறகு சியாட்டலில் சூரியன் தென்பட்டதால், புத்தகத்தையும் காமிராவையும் தூக்கிக் கொண்டு பீச்சுக்கு சென்று விட்டேன். நேரம் கிடைக்கும் போது அந்த தலைப்பில் எழுத நினைத்ததை முடிக்க…