Category: சுஜாதா
-
ஸ்டிரச்சர் கேஸ்
தமிழ் சினிமா இன்னமும் ஸ்டிரச்சர் கேஸ் தான். வருடத்திற்கு குறைந்தது இருநூறு திரைப்படங்களாவது திரைக்கு வருகின்றன (முந்நூறு பூஜைகள்). அதில் பத்துப் படம் போட்ட பணத்தை எடுத்தால் பெரிய விஷயம். ஒரு படமோ அல்லது அரை படமோ தான் மனதில் நிற்கும் படங்கள். மற்றவை எல்லாம், என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை தான். கடந்த பத்தாண்டில் வெளியான, நாயகனைப் போல், முள்ளும் மலரும் போல் ஒரு கால் நூற்றாண்டு கழித்தும் மனதில் நிற்கும் படங்கள் எவை…
-
மீண்டும் – இன்ன பிற
2010ல் தமிழ் பேப்பரில் பாரா எழுத சொல்லி இன்னபிற என்றொரு வாரப் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு உட்கார்ந்து நள்ளிரவு வரை எழுதி முடித்து சொக்கனுக்கு அனுப்பி விட்டு தூங்கப் போவேன். அது வெளிவந்து கொண்டிருந்தபோது யாராவது ஒரு ஆசாமி – சூப்பர் ப்ரோ என்று டுவிட்டரில் சொல்வார். அதோடு சரி. ரொம்ப வரவேற்பெல்லாம் இருந்ததாக ஞாபகம் இல்லை. கிட்டத்தட்ட 25 வாரங்களுக்கு பிறகு வேலைப் பளு காரணமாக அப்பத்திக்கு ஒரு…
subbudu
-
கண்ணீரில்லாமல்
ஏழு வருடங்களுக்குப் பிறகும் வாரம் ஒருமுறையாவது ஞாபகத்துக்கு வந்து விடுவார். சில சமயம் பல நாட்கள். ஆகாய விமானங்கள் தடயமின்றி காணாமல் போனாலோ, இந்தியாவை சுத்தம் செய்கிறேன் என்று யாராவது சவடால் விட்டாலோ, ‘சே, வாத்தியார் என்ன சொல்லியிருப்பார்’ என்றே இன்னமும் தோன்றுவது அதிசயமல்ல. அவரெழுதிய எந்த ஒரு புத்தகத்தை இப்போது படிக்கும் போதும், ‘இவருக்கு என்ன தான் புரியாமல் போயிருக்கும்’ என்று தோன்றுவதும் அதிசயமல்ல. முன்னமே சொன்னது போல், எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை…
subbudu
-
ஜீவனோபாயம்; எழுத்தாளன்
சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய – ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட – எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ…
subbudu
-
சுஜாதாட்ஸ் – 6
பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை…
subbudu