Category: சியாட்டல்
-
எந்தரோ மஹானுபாவுலு !!
போன வாரம் லேனா தமிழ்வாணன், தமிழ் சங்கம் சார்பில் சியாட்டல் வந்திருந்தார். இரண்டு வாரம் முன்பு யேசுதாஸின் கச்சேரியில், எள் போட்டு எண்ணை எடுத்தார்கள். இன்னும் இரண்டொரு வாரங்களில் எஸ்.பி.பியும் சரணும் தகரம் கூட தங்கம் தானே பாட வருகிறார்கள். சியாட்டலில் இது போல தமிழ் / தெலுங்கு / ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் அம்முகிறது. காரணத்தை கார் ஒட்டிக் கொண்டே யோசித்துப் பார்த்தால் சற்றே புகை விலகுகிறது. நேற்று கோவிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு…
-
ஏறக்குறைய சொர்க்கம்
ஒரு வருஷம் இருந்தால் போதும், சியாட்டல் போதும் போதும் என்றாகிவிடும். சென்னையில் மழையே இல்லை என்று சொல்பவர்களில் ஒரு பத்து பேரை சியாட்டல் அனுப்பினால், மவனே !! ஆள விடு என்று ஒடிவந்து விடுவார்கள். ஆனால் மைக்ரோ சாப்டும் மயூரியும், தமிழ் மனங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்ரோ சாப்டில் தமிழ் ஆசாமிகள் அதிகம் போலிருக்கிறது. மைக்ரோ சாப்ட் பற்றி தெரிந்தவர்களுக்கு, தெரியாத மயூரி பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. மயூரி ஒரு மளிகை கடை. அவ்வளவேதான். ஆனால்…