Category: இசை
-
பச்சைத் தமிழனின் கலைந்த தலை
எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு. வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு…
-
முத்தம் தின்பவள்
நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டுப் பூ இவள் தினம் ஆடை சந்தையிலே முதலில் தோற்பவள் இரு குறையட்டும் திரு விளக்கு நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு அட!! கடவுளை அடையும் வழிகள் என் மேல் எழுதிருக்கு மய்யா மய்யா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மய்யா மய்யா என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும் பொய்யா பொய்யா… அயிட்டம் நம்பரிலும் ஒரு subtle இலக்கிய சாதனை. அட போட வைத்தவர்கள் வைரமுத்து, ரஹ்மான் மற்றும் சின்மயி.
-
ஓட வைக்கும் பாடல்
செங்காந்தள் இதழ் என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ் மின்காந்தப் பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ் நீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் மன்மத தமிழ் உன் தமிழ் என் தமிழ் T-A-M-I-L தமிழ் நாலு நாளாய் டிரட்மில்லில் ஓட வைக்கும் இந்த ‘தமிழ்’ வரிகள், மணிசர்மாவின் இசையில், ரஞ்சித்தும் ஸ்வேதாவும் பாடிய ‘நீ முத்தம் ஒன்று கொடுத்தால்’ என்ற பாடல். இடம்பெற்ற திரைப்படம் போக்கிரி. ஹியர் போனில் இருந்து சத்தம் வழிந்து, ஒன்ஸ்மோருடன்…