Category: புத்தகம்
-
பின் கதைச் சுருக்கம்
தீவிரவாதம், முதலாளித்துவம், எல்லை, யுத்தம் என்றெல்லாம் பரபரப்பு கட்டுரைத் தொடர் எழுதும் பா. ராகவனின், எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அமைதிப் புத்தகம், பின் கதைச் சுருக்கம். கல்கியில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றதாக பின் கதைச் சுருக்கத்தின் முன்னுரை கூறுகிறது. 17 நாவலாசிரியர்கள். 17 நாவல்கள். ஒரு இணைக்கும் பாலம். அனுபவங்கள். இதிலுள்ள 17 நாவலாசிரியர்களையும் அவர்களின் ஒரு நாவல் பற்றிய சிறு குறிப்பும், அந்த நாவலுக்கு பின்னுள்ள சில ஆழ்ந்த அனுபவங்களுமே இதன் களம். இதிலுள்ள…
-
எழுத்தாளனுக்கு சினிமாவில் என்ன வேலை?
கொற்றவை எழுதி முடித்த கையோடு எழுத்துக்கு கொஞ்ச காலம் break விட்டதன் காரணத்திற்கு ஜெயமோகன், ஆனந்த விகடன் பேட்டியில் பதில் சொல்கிறார். கொற்றவையின் உருவக நடை மண்டைக்குள் ஏறி இறங்க மறுத்ததாலும், ஒரு பெரிய நாவல் எழுதி முடித்த சலிப்பும் முக்கிய காரணம் என்கிறார். நான் கடவுள் படத்தில் வசனம் எழுதுகிற அவர், இயக்குநர் பாலாவுடன் பணிபுரிகிற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் hype கொடுக்கிறார். முக்கியமாக மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும்…
-
ரமண சரிதம்
சுந்தரம் என்னும் நண்பன், “என்னடா எப்ப பார்த்த்தாலும் சி, சி++ன்னு ஜல்லி அடிக்கற, வாழ்கைல நீ பாக்க வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு ராசா. வா போலாம்” என்று அழைத்துப் போனது தான் திருவண்ணாமலை. இது நடந்தது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. அதற்கு பிறகு அவனுடனும், அவனில்லாமல் தனியாகவும், வேறு சில நண்பர்களுடனும் பல முறை சென்று வந்தாலும், அங்கிருக்கும் அந்த ஈர்ப்பு சக்தி எதனால் என்பது பிடிபடவில்லை. கடவுளா, அந்த மலையா, பிரம்மாண்டமான கோயிலா,…
-
அசோகமித்திரன் – தீராநதி – நேர்க்காணல்
தீராநதியின் ஜனவரி இதழில் வந்துள்ள அசோமித்திரனின் நேர்காணல், சில காலமாய் போரடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கிய இதழுக்கு உயிருட்டக்கூடியது. அசோகமித்திரனின் பேச்சை ஒரு முறையாவது கேட்டவர்கள், இந்த நேர்க்காணலை படிக்கும் போது அவருடன் உரையாடுவது போலவே இருப்பதை அறிவர். வழக்கம்போல எளிமையான் பேச்சும், மற்றவரை கேலி செய்யாத கருத்துக்களும், செறிவான அனுபவங்களும் நிறைந்தது இப்பேட்டி. தற்போதை புத்தக பதிப்புத் தொழில் பற்றிய தனது ஆர்வத்தை முன்வைக்கும் போது நிறைய புத்தகம் விற்பது சந்தோஷமாக இருந்தாலும், அவை படிக்கப்பட…
-
எனக்குள் நான் – பாலகுமாரன்
“I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.…