Category: பயாஸ்கோப்
-
நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்
இந்த வருட ஆஸ்கர்களை கவர்ந்து சென்ற கோயன் சகோதரர்களின், மனிதனின் ஆதார குணங்களை பற்றிய அட்டகாசமான படம். ஆர்ட்-ஹவுஸ் படம் போல இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய திரைக்கதை, இசையில்லாமல் இழுத்துச் செல்லப்படும் காட்சியமைப்பு, சொல்லாமல் சொல்லப்படும் சின்னச் சின்ன விஷயங்கள் என்று பின்னிப் பெடலெடுத்திருக்கும் படம். கண்ணில் எதிர்ப்படும் வயதானவர்களை கேள்வி கேட்டுக் கொண்டே வித்தியாசமாக சுட்டுச் சாகடிக்கும் சைக்கோவான ஒரு வில்லன். குற்றம் செய்த இடத்துக்கே மீண்டும் செல்ல எத்தனிக்கும் மற்றோரு பாத்திரம். போலிஸ்…
-
3 X 9 = டிஸ்லெக்ஸியா
அமீர்கானின் டிஸ்லெக்ஸியா பற்றி பாடமெடுக்கும் தாரே சமீன் பர் கொஞ்சம் பிடித்திருந்தது. முதல் பாதி. புத்தகத்தில் எழுத்துக்கள் நடனமாட, எண்கள் புரியாத கோலங்களாய் தெரிய, அவ்வப்போது பந்துகள் பறந்து வர நடமாடும் அந்த டிஸ்லெக்ஸியா சிறுவன் மனதை பறித்துக் கொண்டு போகிறான். இந்த வருடத்தின் சிறந்த டாலண்ட் ஷோ. இடைவேளையில் கோமாளி வேடத்துடன் வரும் அமீர்கான், வழக்கம் போல் இந்திய மசாலாவாக இல்லாமல் ஹாலிவுட் படம் போல் நகரும் படத்தில் நிஜ கோமாளியாய் புகுந்து குழப்பியடிக்கிறார். சிறந்த…
-
ஸ்லோமோஷனில் பில்லா
என் நடிப்புத் தொழிலின் மிகப்பெரிய முக்கிய படம் என்கிறார் அஜித்குமார். பத்து வருடங்களுக்கு பிறகு, எல்லா மீடியா ஸ்டூடியோவுக்கும் பேட்டி அளிக்கிறார் என்று ரசிகர்கள் பூரிப்படைகிறார்கள். சிவாஜியை விட அதிகமாக பிரிண்ட் போடப்பட்ட படம் என்று கோடம்பாக்கம் குதூகளிக்கிறது. படத்தில் ஒன்றையும் காணோம். கதையும் திரைக்கதையும் பிரிக்கப்பட்ட அனாதைக் குழந்தைப் போல் அழுகிறது படம். பில்லா 2007. ஒரு சன் க்ளாஸ் விளம்பரம் போல படத்தில் எல்லாரும் எல்லா காட்சிகளிலும் கண்ணாடியில் காட்சி அளிக்கிறார்கள். கலர் க்ரேடிங்கில்…
-
ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி
இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold”. இதையே பலரும் பேசிப்பேசி, ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு. அமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ…
-
கல்லூரி
பாலாஜி சக்திவேலின் கல்லூரி பிடித்திருந்தது. அதன் நடிக்காத நடிக கண்மணிகளும், தெளிவான திரைக்கதையும், ஜோஷ்வா ஸ்ரீதரின் உருத்தாத பிண்ணனி இசையும், செழியனின் காமிராவும் தான் பலம். கடந்த பத்து வருடங்களில் கல்லூரியில் படித்திருக்கும் யாரும் தன்னையும் தன் நண்பர்களையும் மீண்டும் நினைவு கொள்ளலாம். உண்மைக்கு வெகு அருகில் படம் எடுப்பது தான் தன்னுடைய ஸ்டைல் என்று மீண்டும் நினைவுபடுத்துகிறார் பாலாஜி. போன படமான காதலைப் போலவே க்ளைமாக்ஸ் மனதில் நிற்கவில்லை என்றாலும், படத்தை முடிக்க எடுக்கப்பட்ட டிராமாடிக்…