ஸ்லோமோஷனில் பில்லா

billa_ajith_nayanthara.jpg

என் நடிப்புத் தொழிலின் மிகப்பெரிய முக்கிய படம் என்கிறார் அஜித்குமார். பத்து வருடங்களுக்கு பிறகு, எல்லா மீடியா ஸ்டூடியோவுக்கும் பேட்டி அளிக்கிறார் என்று ரசிகர்கள் பூரிப்படைகிறார்கள். சிவாஜியை விட அதிகமாக பிரிண்ட் போடப்பட்ட படம் என்று கோடம்பாக்கம் குதூகளிக்கிறது. படத்தில் ஒன்றையும் காணோம். கதையும் திரைக்கதையும் பிரிக்கப்பட்ட அனாதைக் குழந்தைப் போல் அழுகிறது படம். பில்லா 2007.

ஒரு சன் க்ளாஸ் விளம்பரம் போல படத்தில் எல்லாரும் எல்லா காட்சிகளிலும் கண்ணாடியில் காட்சி அளிக்கிறார்கள். கலர் க்ரேடிங்கில் ப்ளூ கலரை படமெங்கும் தெளித்திருக்கிறார்கள். அஜித்திற்கு இன்னமும் டையலாக் டெலிவரி வந்தபாடில்லை. பிரபுவையும் அந்த ஆந்திரா ஹிரோ மீசையுடன் வரும் ஆதித்யாவையும் தவிர வேற யாரும் நடிப்பதைப் பற்றி கவலைப்பட்டதாக இல்லை.

படம் எடுக்கப்பட்டது மலேசியா தான். மக்கள் ஒத்துக்கொள்வார்கள். அதற்காக எல்லா காட்சிகளிலும் பேக்ட்ராப்பாக பெட்ரோனாஸ் டுவின் டவரை காட்டியிருக்க வேண்டாம். ஹீரோவும், செகண்ட் ஹீரோவும், போலீஸும், எல்லாரும் டுவின் டவரின் பக்கத்திலேயே இருக்கிறார்கள்.

ஸ்லோமோஷனை over-cranking என்று டெக்னிக்கலாக குறிக்கிறார்கள். படத்தை ஷூட் செய்யும் போது, செகண்டுக்கு 24 பிரேம்களை விட வேகமாக பதிவு செய்து கொண்டு, படத்தை திரையிடும் போது 24 பிரேம்களாக மாற்றினால ஸ்லோமோஷன் எஃபக்ட் கிடைக்கிறது. பில்லாவில் வழக்கத்திற்கு அதிகமான ஸ்லோமோஷன் காட்சிகள். ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஓவர்ரேட்டட். நயன்தாராவும் தான்.

“வெத்தலைய போட்டேண்டி” பாட்டில் தான் படத்தின் இருக்கம் குறைகிறது. விஷ்ணுவர்த்தனிடம் பட்டியலில் இருந்த முதிர்ச்சி தெரியவில்லை. திரைக்கதை என்பதே non-existentஆக இருப்பது வருத்தம் தான்.

(ஸ்லோ)மோஷன் ஸிக்னஸ்.