கல்லூரி

kalloori balaji shankar.jpg

பாலாஜி சக்திவேலின் கல்லூரி பிடித்திருந்தது. அதன் நடிக்காத நடிக கண்மணிகளும், தெளிவான திரைக்கதையும், ஜோஷ்வா ஸ்ரீதரின் உருத்தாத பிண்ணனி இசையும், செழியனின் காமிராவும் தான் பலம்.

கடந்த பத்து வருடங்களில் கல்லூரியில் படித்திருக்கும் யாரும் தன்னையும் தன் நண்பர்களையும் மீண்டும் நினைவு கொள்ளலாம். உண்மைக்கு வெகு அருகில் படம் எடுப்பது தான் தன்னுடைய ஸ்டைல் என்று மீண்டும் நினைவுபடுத்துகிறார் பாலாஜி. போன படமான காதலைப் போலவே க்ளைமாக்ஸ் மனதில் நிற்கவில்லை என்றாலும், படத்தை முடிக்க எடுக்கப்பட்ட டிராமாடிக் நீட் முடிவு தான் என்றாலும், போய்ச் சேரும் இடத்தை விட அந்த பயணம் தான் முக்கியமாதலால், யாவும் நலம்.

சொசைட்டிக்கு பயந்து நடக்கும் அந்த கயல்விழியும், மைனர் செயினோடு காலேஜுக்கு வந்து, தாத்தாவின் ‘மேலுக்கு முடியாததால்’ பாதி வழியில் திருமணம் செய்து கொள்ளும் காமாட்சி பையனும், தமன்னாவும், அத்லெட்டிக்காக வரும், தமிழ் சினிமாவின் ஹீரோ தோற்றம் கொஞ்சமும் ஒத்து வராத அந்த ஹிரோவும் கொஞ்ச நாளைக்கு மனதில் நிற்பார்கள்.

தமிழ் சினிமாவில் வரும் யாருக்கும் படத்தில் பார்ட் இல்லாததால் கோடம்பாக்க யூனியன்கள் பாலாஜியின் மேல் கோவவித்துக் கொண்டிருக்கலாம். ஷங்கர் தயாரித்த படம் என்றார்கள். ஏவிஎம்மையும் சிவாஜியையும் நினத்து சிரிப்பு வந்தது. சரியா இது தவறா என்ற பாட்டில் மழையில் நம்மை நனைத்ததற்காக ஜோஷ்வா, செழியன், பாலாஜிக்கு யதார்த்த நன்றிகள்.