Category: பயாஸ்கோப்
-
உசிர் உதடு மற்றும் சுழி
படம் வெளிவர ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கும் மணி ரத்னத்தின் ஹைப் மெஷின், ஆரம்பித்தாயிற்று. இனிமேல் மனிதர் எல்லா பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளிப்பார், படத்தை பற்றிய கிசுகிசு வர ஆரம்பிக்கும், முப்பது நொடி படத்தை காட்டி கவர்ந்திழுப்பார். ராவணன் இசை கேட்க சுவாரசியமாயில்லை. ராவணனின் ட்ரைலரை பார்த்தால் காட்டுத் த்ரில்லர் போல இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி ரஹ்மான் வித்தியாசமாய் இசையமைத்திருக்கிறார். ஆனாலும் வைரமுத்து வரிகளுக்கு கார்த்திக் பாடியிருக்கிற உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம்…
-
போன வார சினிமா
எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம். சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை மணியிலேயே நஸ்ருதீன் ஷாவை பற்றி கண்டுபிடித்து விட்டதனால், இயக்குனரின் வித்தியாச…
-
இச்சைக்கொண்டு
தலை கலைந்த பொம்மை, தனியே ஆடும் ஊஞ்சல், எட்டிப் பார்க்கும் பாம்பு என்று ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை டெக்ஸ்ட்புக் சமாசாரங்களும் இருந்தாலும், படம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த குடும்பத்தின் தனிமையும், இயற்கையான புற சத்தங்களும், பிண்ணனி இசையில்லாமல் விடப்பட்டிருக்கும் பல காட்சிகளுமே காலர் தூக்க வைக்கும் விஷயங்கள். அமெரிக்காவின் வசிக்கும் தமிழ்க் குடும்பம் கடைசியாக கொஞ்சம் உருப்படியாக திரையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ப்ளாரிடாவில் பாராஸ்கீயிங் செய்து கொண்டு, கண்ணைவிட மிகப்பெரிய சன்க்ளாஸ் அணிந்து,…