Month: November 2007
-
அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – சற்றே பெரிய சிறுகதை
அப்பா சற்றே சதைப் போட்டிருந்தார். ப்ரீத்ஸின் சாப்பாடும், பேத்திகளுடனான விளையாட்டும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியிருந்தன. மூன்று மாதங்களுக்கு முன் சியாட்டல் விமான நிலையத்தில் அப்பாவை பார்த்த போது, ரொம்பவும் மெலிந்து போயிருந்தார். இன்னும் வயதாகியிருந்தது. தலை முடி நிறைய நரைத்திருந்தது. அம்மாவுக்கு பின் அப்பா தனிமையானது என்னமோ உண்மை தான். ஆனாலும் பூஜை புனஸ்காரம், அயோத்தியா மண்டபம், மார்கழி மாத இசைக் கச்சேரிகள் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருப்பதாக சொன்னாலும், தனிமையின் வலி…
-
இயந்திரா 1 – இப்ப ராமசாமி
கொஞ்ச நாட்களாகவே இயந்திரா என்று இன்றைய விஞ்ஞானம்/வர்த்தகம்/தொழில்நுட்பம் பற்றி ஒரு வாரப்பத்தி எழுத எண்ணம். ஆலன் கே (Alan Curtis Kay) என்ற கணினி விஞ்ஞானி சொன்னது போல டெக்னாலஜி என்பது நீங்கள பிறந்த பின்பு உருவாக்கப்பட்டவையே (Technology is anything that was invented after you were born.). லூமியர் பிரதர்கள் உருவாக்கிய சினிமா புரஜக்டெர் எல்லாம் வரலாறு தான். இன்று காலை நீங்கள் ஷேவ் செய்யும் போது, ஜேம்ஸ் காமரூன் அறிமுகப்படுத்திய ஸ்டீரியோஸ்கோபிக்…
-
இன்று
வீட்டிற்கருகில் இருக்கும் மைக்ரோசாப்ட்டின் வழியாக காரோட்டிக் கொண்டிருந்தேன். ரஜினி படம் கணக்காக, விண்டோஸ் மெஸஞ்சரின் இரண்டு மனித பொம்மைகளின் பதினைந்தடி கட்-அவுட் வைத்திருக்கிறார்கள். அழகாக இருந்தது. விண்டோஸ் லைவ்(windows live) என்னும் சாப்ட்வேர் பாக்கேஜை இந்த வாரம் அறிமுகப்படுத்தியது தான் காரணம். இந்த தமிழக கட்-அவுட் கலாசாரம் ரெட்மண்ட் வரை வந்ததற்கு காரணம் பச்சைத் தமிழ் மைரோசாப்ட் ஆசாமிகளா என்று நண்பர்களை கேட்க வேண்டும். ————————– சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள்.…
-
தீபாவளி நினைவுகள்
இந்த சியாட்டல் தீபாவளி ஏற்கனவே முடிந்து விட்டது. போன வாரம், வேறு கவுண்டியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் சிகரெட் லைட்டரால் ஒரு அடி மத்தாப்பு ஏற்றி, பாம்பு மாத்திரை கொளுத்தி, புஸ்வானம் விட்டு, மைக்ரோவேவ் திரட்டிப்பால் சாப்பிட்டு கிருஷ்ணனையும் நரகாசுரனையும் நினைத்துக் கொண்டேன். அண்டை வீட்டார் புகை வருவதைப் பார்த்து, கலிபோர்னியா காட்டுத் தீயென பயந்து வெளியே எட்டிப் பார்த்தார்கள். சென்னையில் பால்ய தீபாவளி கொண்டாடிய பொழுது, பட்டாசுக்காக சாப்பாடு துறந்தது பல முறை. அம்மா…