Month: April 2007
-
சமையல் குறிப்பு !!
“தினமும் பீட்ஸா பாஸ்தான்னு சாப்டாம ஒழுங்கா பாக்கெட் சாப்பாடு சாப்டுங்க”, என்று மோவாக்கட்டையை அழுத்திப் பிடித்து சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினாள் மனைவி. பாக்கெட் சாப்பாடா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு மங்கையர் மலர் குறிப்பெழுதலாம். ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன், அண்டாகள் நிறைய சாம்பாரும் ரசமும் அவியலும் மற்ற சில சுவை உணவுகளுமாய் தாயராகிக் கொண்டிருக்க, யாரோ கெஸ்ட் வருகிறார்கள் என்று நானும் நினைத்தேன். “தோ பாருங்க…இங்க இதை பிடிங்க” என்று கூப்பிட்ட போது…
-
ட்ருமேன் கப்போட்டி
1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல். இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at…
-
சுளுக்கு !!
போன செவ்வாய்கிழமை, அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி பாடிக்கொண்டே 2ண்ட் அவெண்யூவில் ஓட்டமும் நடையுமாக பஸ் பிடிக்க வரும் போது, மளுக் என்றது. ஒரு நொடிக்கு கண்களில் ஆயிரமாயிரம் ரத்ன ஊசிக்கள் தெரிந்தன. நின்றேன். அடுத்த அடி வைக்க முடியவில்லை. 212 பஸ் வேறு செனெகா ஸ்டிரீட்டை தாண்டி சென்று விட்டது. ஷூவில் ஒரு பக்கம் சற்று அதிகமாகவே தேய்ந்து இருந்ததால், கணுக்கால் சட்டென்று உட்புறமாக மடங்கி மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் அது…
-
சிவாஜி – பாடல்கள்
Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில்…