Month: January 2007
-
ரமண சரிதம்
சுந்தரம் என்னும் நண்பன், “என்னடா எப்ப பார்த்த்தாலும் சி, சி++ன்னு ஜல்லி அடிக்கற, வாழ்கைல நீ பாக்க வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு ராசா. வா போலாம்” என்று அழைத்துப் போனது தான் திருவண்ணாமலை. இது நடந்தது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. அதற்கு பிறகு அவனுடனும், அவனில்லாமல் தனியாகவும், வேறு சில நண்பர்களுடனும் பல முறை சென்று வந்தாலும், அங்கிருக்கும் அந்த ஈர்ப்பு சக்தி எதனால் என்பது பிடிபடவில்லை. கடவுளா, அந்த மலையா, பிரம்மாண்டமான கோயிலா,…
-
கொஞ்சம் கொஞ்சமாய் ரெண்டு
கொஞ்சம் Kill Bill கதை. கொஞ்சமாய் ஹிந்தி சாயல் பாடல்கள், குறிப்பாய் சுஷ்மிதா சென் நடிக்கும் Main Hoon Naa பாடல். கொஞ்சம் Terminator ஸ்டைல் கிளைமாக்ஸ் காட்சி. கொஞ்சம் Titanic முடிவு. இவைகளுக்கு நடுவில் ரெண்டு மாதவன்களையும் சில கவர்ச்சி பெண்களையும் நடிக்க விட்டு, ஒரு சுந்தர்.சி ஸ்டைல் கல்யாண கலாட்டா நடத்தினால் என்னாகும். கொஞ்சம் கொஞ்சமாய் அமிர்தான்சன் காலியாகும். படம் பெயர் ரெண்டு. மாதவனுக்கு போதாத காலம் போலிருக்கிறது. மனிதர் நடிக்கிறேன் பேர்வழி என்று…
-
அசோகமித்திரன் – தீராநதி – நேர்க்காணல்
தீராநதியின் ஜனவரி இதழில் வந்துள்ள அசோமித்திரனின் நேர்காணல், சில காலமாய் போரடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கிய இதழுக்கு உயிருட்டக்கூடியது. அசோகமித்திரனின் பேச்சை ஒரு முறையாவது கேட்டவர்கள், இந்த நேர்க்காணலை படிக்கும் போது அவருடன் உரையாடுவது போலவே இருப்பதை அறிவர். வழக்கம்போல எளிமையான் பேச்சும், மற்றவரை கேலி செய்யாத கருத்துக்களும், செறிவான அனுபவங்களும் நிறைந்தது இப்பேட்டி. தற்போதை புத்தக பதிப்புத் தொழில் பற்றிய தனது ஆர்வத்தை முன்வைக்கும் போது நிறைய புத்தகம் விற்பது சந்தோஷமாக இருந்தாலும், அவை படிக்கப்பட…
-
புதுப்பேட்டை
போன வருடம் வந்த படங்களில், எந்த படம் சிறந்த படம் என்று ஏகத்துக்கு எழுதி குவித்து விட்டார்கள். டீவிடி அட்டைகளுக்கு கதை சுருக்கம் எழுதுபவர்கள் கூட விமர்சகர் போர்வையில் தமிழ் சினிமா விமர்சனம் எழுதும் இந்த கலேபர காலத்தில் உண்மையான சிறந்த படம், கவனிக்கப்படுவது கடினமே. போன வருடத்தில் நிறைய தமிழ் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், பார்த்த பத்து பன்னிரண்டில் பிடித்தது இவ்விவை. புதுப்பேட்டை மற்றும் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. இவ்விரண்டும் எந்த லிஸ்டிலும்…
-
மணியும் ரத்தினங்களும்
ஆடிக்கொரு முறை தான் வரும் மணி ரத்னத்தின் படம். அவர் படம் பற்றி அவரை விட மற்றவர்கள் நிறைய பேசுகிறார்கள். “…த்தா படன்னா இப்படி நச்சுனு இருக்கணுன்டா” என்று விடலைகளும், “மனிஷாவும் அரவிந்த்சாமியும் மீட் பண்ணும் போது காமிரா என்னமா திரும்பறது, அப்சலூட்ளி கார்ஜியஸ்” என்று இன்னோவா ஓட்டும் லயன்ஸ் க்ளப் மாமிகளும், “ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கமற்ற வெற்று கோஷங்களும், அதிகார வெறியும் விஷயங்களை மொண்ணையாக புரிந்து கொள்ளும் மெளடீகமும் உள்ளன…