கொஞ்சம் கொஞ்சமாய் ரெண்டு

rendu madhavan

கொஞ்சம் Kill Bill கதை. கொஞ்சமாய் ஹிந்தி சாயல் பாடல்கள், குறிப்பாய் சுஷ்மிதா சென் நடிக்கும் Main Hoon Naa பாடல். கொஞ்சம் Terminator ஸ்டைல் கிளைமாக்ஸ் காட்சி. கொஞ்சம் Titanic முடிவு. இவைகளுக்கு நடுவில் ரெண்டு மாதவன்களையும் சில கவர்ச்சி பெண்களையும் நடிக்க விட்டு, ஒரு சுந்தர்.சி ஸ்டைல் கல்யாண கலாட்டா நடத்தினால் என்னாகும். கொஞ்சம் கொஞ்சமாய் அமிர்தான்சன் காலியாகும். படம் பெயர் ரெண்டு.

மாதவனுக்கு போதாத காலம் போலிருக்கிறது. மனிதர் நடிக்கிறேன் பேர்வழி என்று இடது புருவத்தை 146 முறை உயர்த்துகிறார். பாடல்களில் அலைபாயுதே மாதவனா இது என்று ஆச்சரியபட வைக்கிறார். பாக்யராஜ் படத்தில் இருக்கிறார்.

இவை தவிர காமெடி என்ற பெயரில் ரெண்டு முறை வடிவேலுவின் உயிர் நாடியை அழுத்தி பிடிக்கிறார்கள். நமக்கு வலிக்கிறது. இரண்டாம் பாதியில் சந்தானம் தெரியாத்தனமாக ஒரு விகல்ப மாமாவின் உயிர் நாடியை இடிக்கிறார். கலாய்பதாய் நினத்துக் இப்படி டையலாக், ” அண்ணிக்கு அட்டை போச்சு…அப்ப அண்ணனுக்கு….”.

சுந்தர் சி படங்களில் இனிமேல் கல்யாண சீனே இருக்க கூடாது என்று சட்டம் போட்டால் புண்ணியமாய் போகும். தமிழ் சினிமாவில் சுத்தமாய் ஹாஸ்யம் இல்லாமல் போனதை நிருபிக்கிறார்கள். பாமா விஜயத்தில், நாகேஷ் நடிகை பாமாவை பார்க்க அவரது பங்களா செல்வார். பாமா வரும் வரை அவரது அசிஸ்டெண்ட் ஸ்ரீகாந்துடன் பேசிக்கொண்டிருக்கும் நாகேஷ்,” சார், பாமா ஒரு படம் நடிச்சாங்களே…என்ன படம் சார் அது ? அதுல கூட இண்டர்வல் விட்ட உடனே மக்களெல்லாம் வெளிய வந்து சந்தோஷமா இருப்பாங்களே ?”. ஞாபகம் வந்தது.