Year: 2006
-
கூகிள் ரீடர் 2.0
காலையில் ஸ்பார்கி குரைத்தது. ஸ்பார்கி[sparky], என் பக்கத்து அப்பார்ட்மெண்டின் செல்ல ஜெர்மன் ஷெப்பெர்டு. நான் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்த போது, முதல் இரண்டு நாள் இரவில் குரைத்து முறைத்தது. அந்த வீட்டில் இருந்த பொக்க வாய் ஸ்பானிஷ் பாட்டி, துணி துவைக்கும் போது, ஹாய் சொன்னவுடன் தான் ஸ்பார்கி கனிவு பார்வை பார்த்தது. ஸ்பார்கி என்னை போல் ஒரு அம்மாஞ்சியை பார்த்தால் தான் குரைக்கும். எதிர் வீட்டு ஆஜானுபாகு Nickகை பார்த்தால், love seatயில் முகம்…
-
சில்லுனு ஒரு காதல்
கௌதம் மேனனின் சிஷ்யர் கிருஷ்ணாவின் இயக்கதில் முதல் படம். சூர்யா – ஜோதிகா திருமணத்திற்க்கு ஒரு pre-cursor ஆக வரும் படம். ரஹ்மான் – வாலி காம்பினேஷனில் ஒரு totally different ரொமாண்டிக் படம். சில்லுனு ஒரு காதல், இப்படியாக பல எதிர்பார்புகளை தாங்கி வந்தது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை ஊறுகாயாய் வைத்துக் கொண்டு கன்னா பின்னாவென்று கடித்துத் துப்பி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு பாராவில், இந்த படத்தை பற்றி சொல்வதாய் உத்தேசம். பார்க்கலாம். சூர்யா…
-
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் கம்ப்யுட்டரின் வருடாந்திர புது டெக்னாலஜி அறிமுகம் நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடைப்பெற்றது. திரைப்படம் பார்க்க ஏதுவான வைட் ஸ்கிரீன் iPod புழக்கத்திற்க்கு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து வீடு திரும்பினார்கள். iPod Shuffle இப்போது ஒரு பாதி வெத்துப்பெட்டி சைஸில் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடத்தில் நானோ டெக்னாலஜி வைத்து Shuffle தேய்ந்து கட்டெறும்பானால் ஆச்சரியப்படாதீர்கள். நேற்றைய நிகழ்ச்சியின் வெப்காஸ்டை பார்த்து இரண்டு மணி வேஸ்ட் செய்ததில், இவ்வளவு நாளாக ஸ்டீவ் ஜாப்ஸின் மேல் இருந்த…
-
இந்திய புத்தக விமர்சனம்
[படம் – இந்து] நிலஞ்சனா ராய் இந்துவில் எழுதியிருக்கும் The decline of the book review, ஒரு காலத்தின் கட்டாயம். புத்தகம் மற்றும் கலை சார்ந்த விமர்சனங்களை படிப்பாரில்லாமல், எல்லா பத்திரிக்கைகளும் ஏறக்குறைய நிறுத்தி விட்டன. மெட்டி ஓலியும், வால மீனும் மக்களை சதா சர்வ காலமும் ஏழரை சனி போல பிடித்துக் கொண்டிருப்பதால், குமுதத்திலும் விகடனிலும் இளமை காம்பெளண்ட் பக்கம் பக்கமாக தலை விரித்தாடுகிறது. அப்படியே தப்பி தவறி புத்தக விமர்சனம் போட்டு விட்டால்,…
-
சஞ்சய் சுப்பிரமணியம்
என்னை கேட்டால் கர்னாடக இசையில் இப்பொழுதுல்ல Top Three ஆசாமிகளில், சஞ்சய் சுப்பிரமணியன் தான் பர்ஸ்ட் என்பேன். சுருதி சுத்தமாகவும், ஸ்பெஷ்டமான உச்சரிப்புடனும், சங்கதியில் hip-hop பண்ணக்கூடிய திறமையுடனும் இருப்பவர். Total entertainer. ஒரு மார்கழி இரவில், பத்மா சேஷாத்திரியில் அவர் பாடிய தோடி ராகம், இன்னும் நினைவிருக்கிறது. அதே ராகத்தை பாடிக் கொண்டே பைக்கில் வீடு திரும்பிய போது, நாய் துரத்தியது. இம்மாத காலச்சுவடு, அவருடன் ஒரு அருமையான நேர்காணலை வெளியிட்டுள்ளது. நம் mainstream பத்திரிக்கைகள்…