Month: December 2006
-
இரண்டு கட்டுரைகள்
சமீபத்தில் படித்த கட்டுரைகளில் இரண்டு பிடித்தன. ஒன்று. ரோபாடிக்ஸ் பற்றி சயண்டிபிக் அமெரிக்கனில், பில் கேட்ஸ் எழுதிய, A Robot in Every Home. இருக்கிற எல்லா டெக்னாலஜியும் ரொம்ப முன்னேற்றி ஓசைப்படாமல் ரோபாடிக்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் மைக்ரோசாப்ட்காரர்கள். கேட்ஸின் இந்த கட்டுரை, ரோபாடிக்ஸ் பற்றி சாமனியனுக்கு ஒரு curtain raiser. கேட்ஸ் சொல்ல வருகிற விஷயம் சுவாரசியமானது தான். இதுதான். தற்போது உலகில் உள்ள அனைத்து ரோபோ தயாரிப்பாளர்களும், அவர்களுக்கு தேவையான மென்பொருளை அமைத்துக்…
-
எம்.எஸ் – வாழ்வே சங்கீதம்
ஆனந்த விகடனில் மார்கழி சீசன் எழுதும் வீயெஸ்வியை பற்றியும் அவரின் இசை புலமையை பற்றியும், அவரின் சுவாரசியமான கட்டுரைகளை படித்தவர்களுக்கு தெரியும். எம்.எஸ்சை பற்றிய தமிழ் புத்தகம், அதுவும் வீயெஸ்வி எழுதியது என்றவுடன் படிக்கத் தோன்றியது. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற குஞ்சம்மா என்கிற எம்.எஸ்சின் இசை/இல்லற வாழ்வை பற்றிய ஒரு எளிய அறிமுகம் தான், கிழக்கு பதிப்பகத்தின் எம்.எஸ் – வாழ்வே சங்கீதம். எம்.எஸ் போன்ற ஒரு இசை அரசியின் வாழ்வை 141 பக்கங்களுக்குள் அடக்கிவிட…
-
பீப்பிங் டாம்
மயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் இன்னும் அப்பார்ட்மெண்டாக மாற்றாமல் உள்ள ஓரிரு புராதன வீடுகளில் நண்பன் ஸ்ரீதரின் வீடும் ஓன்று. போன வாரம் போன் செய்த போது, ஸ்ரீதரின் பாட்டி எடுத்தார். அங்கு இரைச்சலாக இருந்ததால் கொஞ்சம் சத்தமாக பேசினேன். “பாட்டி, சவுக்கியமா. ஸ்ரீதர் இருக்கானா ?”. “ம்…….ஸ்ரீதர் கொத்தவரங்கா வாங்க டாங்க் வரைக்கும் போயிருக்கான். தோ வந்துருவான்”. “ஓ..ஒகே. நோ ப்ராப்ளம். நீங்க எப்…” விசாரிக்க போன என்னை குறுக்கிட்டு “சத்த நாழி கழிச்சு…
-
தீபாவளி, தலைவலி
இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவின் மேல் உள்ள நம்பிக்கைகள் மேலும் குறைந்தன. இத்தனைக்கும் பார்த்தது இரண்டே தீபாவளி ரிலீஸ்கள் தான். வரலாறு – வல்லவன். தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பத்து பார்முலாக்கலில், இவை இரண்டும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும். காதலுக்காக வேஷம் போடும் காதலனும், பிறந்ததும் தன்னை பிரிந்த தந்தையை தேடிச் செல்லும் ஒரு பிள்ளையும் தமிழ் சினிமாவின் ஆதி காலத்து வரவுகள். வல்லவன் பார்த்துவிட்டு திரும்பும்போது பிடித்த தலைவலி விட ரெண்டு நாளாகியது. கதையல்ல நிஜம்.…